
“ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.” – 1 கொரி 1:27
தேவன் என்னை தம்முடைய வாயாக இருக்கும் படியாகவும், அவருடைய வார்த்தையை போதிக்கும் படியும் தெரிந்து கொண்டிருக்கிறார். தேவன் என்னை தமக்காக பேசும் படி அபிஷேகித்திருப்பதால், மக்கள் எனக்கு செவி கொடுக்கின்றனர். அது எனக்காக அவர் கொண்டிருக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாகும். தேவன் தாம் தெரிந்து கொள்ளும் எவரையும் அபிஷேகிப்பார். அது உங்களையும் உள்ளடக்கும்.
தேவன் யாரை உபயோகிப்பார்? அவர் சாத்தியக்கூறு இல்லாதவர்களாக தென்படுகிறவர்களை தெரிந்து கொள்கிறாரென்று வேதம் சொல்கிறது. அவர் உங்களை என்னைப் போன்ற சாதாரணமானவர்களை உபயோகிக்கின்றார்.
நான் சுவிஷேசத்தை பிரசங்கிக்க தொடங்கிய போது என் நண்பர்களில் சிலர் என்னை புறக்கணித்தனர். நான் ஒரு பெண்ணாக இருப்பதால் அதை செய்யக்கூடாதென்று நினைத்தனர், என்னிடம் கூறினர்.
ஆனால் நான் அதை செய்து கொண்டிருந்தேன். ஏனென்றால் நான் அதை செய்ய வேண்டுமென்று தேவன் சொன்னார். என்னால் செய்யக் கூடும் என்றும் சொன்னார், அதை நான் நம்பினேன். உங்கள் இருதயத்திலே அவர் ஒரு இலக்கை போட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், உங்கள் மூலமாக தேவன் பெரிதானதொன்றை செய்வார்.
ஒவ்வொரு சாதாரண மனிதனும், தேவனால் வல்லமையாக உபயோகப்படுத்தப்பட இயலும். அவர் உங்களை உபயோகிக்க முடியும் என்றும், அவர் உங்கள் இருதயத்தில் போடும், இலக்குகளையும், தரிசனங்களையும் ஏற்றுக் கொள்ள தைரியத்துடன் இருந்து நீங்கள் அவரை நம்ப வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்!
ஜெபம்
தேவனே, என்னை நீர் தெரிந்து கொண்டிருப்பதால், நீர் எனக்காக கொண்டிருக்கும் முடிவை / நோக்கத்தை நான் சந்தேகிக்க மாட்டேன். உமக்குள்ளாக எனக்கொரு நோக்கத்தைக் கொடுத்திருப்பதால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.