“பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக.” – எபேசியர் 1:5
நம் பரிபூரணமற்ற தன்மையிலே தானே, தேவன் ஏன் நம்மை நேசிக்க வேண்டும்? ஏனென்றால் அவர் அதை விரும்புகிறார். அது அவருக்கு பிரியமாய் இருக்கிறது. நம் கிரியைகளையெல்லாம் எவ்வளவு பாவகரமான தாக இருந்தாலும் நம்மை நேசிப்பது அவரது சுபாவம்.
தீமையை நன்மையால் வெல்லுகிறார் (ரோமர் 12:21). இதை அவர் அவரது எல்லையற்ற கிருபையை நம்மீது ஊற்றுவதன் மூலம் செய்கிறார். இதனால் நாம் பாவம் செய்யும்போது, அவரது கிருபை நமது பாவத்திற்கு மேலானதாக இருக்கிறது. நேசிக்காமல் இருப்பது தேவனுக்கு இயலாததாக இருப்பது போன்று, அவர் நம்மை நேசியாமல் இருக்க செய்வது நம்மால் இயலாததாக இருக்கிறது.
தேவன் நம்மை நேசிக்கிறார். ஏனென்றால் அது அவரது இயல்பு. அவர் அன்பாய் இருக்கிறார்
(1 யோவான் 4:8). நாம் செய்யும் எல்லாவற்றையும் அவர் எப்போது நேசிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் நம்மை நேசிக்கிறார். நம் பாவங்களை மன்னித்து, நம் உணர்ச்சிப்பூர்வமான காயங்களை சுகமாக்கி, உடைந்த நம் இருதயங்களை ஆற்றும் வல்லமை தான் தேவனுடைய அன்பாகும் (சங்கீதம் 147:3).
தேவனுடைய அன்பு நிபந்தனையற்றது. அது நம்மை சார்ந்து இல்லை, அவரைச் சார்ந்தது!. நீங்கள் என்ன செய்தீர்களோ அல்லது செய்யாது இருந்தீர்களோ அதைப் பொறுத்ததில்லை தேவனுடைய அன்பு, என்பதை நீங்கள் உணரும்போது நம்ப முடியாத வெற்றியை நீங்கள் அனுபவிப்பீர்கள். அவருடைய அன்பை சம்பாதிக்க முயலுவதை விட்டு விட்டு அதைப் பெற்றுக்கொண்டு அனுபவிக்கலாம்.
ஜெபம்
தேவனே, உமது அன்பு நம்ப முடியாததாக இருக்கிறது. உம் அன்பை நோக்கும்போது, அது உம்முடைய நன்மையை சார்ந்திருக்கிறது, என்னுடைய செயல்களை அல்ல என்று நினைவுறுத்தப்படுகிறேன். உம்முடைய அன்பை எனக்காக பெற்றுக்கொள்ள எனக்கு உதவுவீராக.