தைரியமாக இருங்கள்

தைரியமாக இருங்கள்

என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின் படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. (யோசுவா 1:7)

நாம் பயத்திலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். நாம் வேதனையில் வாழ்வதை அவர் விரும்பவில்லை, மேலும் அவர் சொல்வதை நம்பிக்கையுடன் செய்வதிலிருந்து, பயம் நம்மைத் தடுப்பதை அவர் விரும்பவில்லை. பயத்தின் சத்ததிற்குப் பதிலாக நாம் அவருடைய சத்தத்தைக் கேட்கும்போது, நம்முடைய அச்சங்களுக்குப் பதிலாக அவரிடம் கவனம் செலுத்தும்போது, அவர் நம் சார்பாக செயல்படுகிறார். நமக்கு பயமுறுத்தும் எண்ணங்கள் அல்லது உணர்வுகள் இருக்கும்போது, நம் எதிரியான சாத்தான், கடவுளிடமிருந்தும் நம் வாழ்க்கைக்கான அவருடைய சித்தத்திலிருந்தும் நம்மை திசை திருப்ப முயற்சிக்கிறான். நம் வாழ்வில், பல்வேறு சமயங்களில் நாம் பயத்தை உணரலாம், ஆனால் கடவுளை நம்புவதையும், தேவைப்பட்டால், “பயப்படுவதையும்” தேர்வு செய்யலாம்.

பல வருடங்களுக்கு முன்பு “அஞ்சுவதைப் பற்றி” ஆண்டவர் என் இருதயத்தில் பேசினார். “பயப்படாதே” என்று அவர் யோசுவாவிடம் கூறியபோது, கடவுள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறாரோ அதைச் செய்வதிலிருந்து, பயம் அவரைத் தடுக்க முயற்சிக்கும் என்று அவர் எச்சரித்தார். பயம் உன்னைக் கட்டுப்படுத்த, பயத்தை அனுமதிக்க வேண்டாம், ஆனால் முன்னோக்கி சென்று, வலுவாகவும், தைரியமாகவும் இருக்குமாறு யோசுவாவிடம் கூறினார்.

நாம் பயப்படும்போது, முதலில் செய்ய வேண்டியது ஜெபம். பயத்தின் மீது உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும் வெற்றி பெறுகிறோம் என்பதை அறியும் வரை கடவுளைத் தேட நாம் தீர்மானிக்க வேண்டும். நாம் இதைச் செய்யும்போது, நம்முடைய அச்சங்களுக்குப் பதிலாக கடவுளின் மீது கவனம் செலுத்துகிறோம். அவர் யார் என்பதற்காக நாம் அவரை வணங்குகிறோம், மேலும் அவர் செய்த, செய்து கொண்டிருக்கும் மற்றும் தொடர்ந்து செய்யப்போகும் நன்மைகளுக்கு, நம்முடைய பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம். அடுத்த முறை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பயத்தை எதிர்கொள்ளும்போது, வலிமையாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டுமென்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் கடவுளின் சித்தத்தில் தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் பயப்பட வேண்டியிருந்தாலும், உங்கள் பயத்திற்குப் பதிலாக கடவுளின் மீது கவனம் செலுத்தி அதைச் செய்யுங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: பயத்தின் சத்தத்தை அல்ல, கடவுளின் சத்தத்தைப் பின்பற்றுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon