தைரியமாக கிருபாசனத்தண்டை சேருங்கள்

“ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” – எபி 4:16

நாம் தேவனிடம் அவருடைய கிருபைக்காக (இயற்கைக்கப்பாற்பட்ட உள்ளான பெலன்) ஓடி வருவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்.

ஆனால் எதிரி நம்மிடம், நாம் தேவனுடைய பிரசன்னத்திலிருக்கும் அளவு நல்லவர்களல்ல என்று நம்மிடம் பொய் சொல்ல முயற்சிக்கிறான். தேவன் நமக்கு உதவி செய்ய இயலாத படி தவறுகள் செய்திருக்கிறோம் என்று நம்மை நம்ப வைக்க முயற்சிக்கிறான்.

ஆனால் தேவனுடைய வார்த்தை சொல்வது அதுவல்ல. அவருடைய வார்த்தை சொல்வதாவது, அவருடைய மீட்கப்பட்ட, மன்னிக்கப்பட்ட பிள்ளைகளாக, அவருடைய சிங்காசனத்தை தைரியமாக அணுகலாம். இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் வாழத் தெரிந்து கொள்ளுங்கள்.

‘தேவன் என்னை நேசிக்கிறாரென்று உணரவில்லை, நான் மன்னிக்கப்பட்டு விட்டதாக உணரவில்லை, எனக்கு ஒரு எதிர்காலம் இருப்பதாக உணரவில்லை’ என்று சொல்வதற்கு பதிலாக, ‘தேவன் என்னை நேசிக்கிறார், அவருடைய அன்பிலிருந்து என்னை எதுவும் பிரிக்க மாட்டாது, அவர் என்னை மன்னித்து விட்டார், அவர் என்னை ஏற்றுக் கொள்கிறாரென்ற நம்பிக்கையோடு அவரை இப்போதே நான் அனுகலாம்’ என்று சொல்லுங்கள்.

நீங்கள் அபாத்திரராக உணரும் ஒவ்வொரு முறையும், தேவனுடைய வார்த்தை சொல்வதை நினைத்துக் கொண்டு உங்கள் பரலோகப் பிதாவிடம் தைரியமாக செல்லுங்கள். உங்களை ஏற்றுக் கொள்ள அவர் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்.

ஜெபம்

தேவனே, உம்முடைய வார்த்தை நான் மன்னிக்கப்பட்டு விட்டேனென்றும், எப்போதுமே உம்மிடம் வரலாம் என்றும் சொல்கிறதால் தைரியமாக உம்மண்டை வருகிறேன். என்னுடைய தோல்விகளை நீர் மன்னித்ததற்காகவும், நீர் என்னுடைய தேவைகளிலெல்லாம் உதவுவதற்காகவும் உமக்கு நன்றி.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon