
“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” – எபி 11:1
உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அல்லது ஒரு பய உணர்வினால் போராடுகின்றீர்களா?
கடந்த காலத்திலே தேவனுடைய உண்மைத்தண்மையை அனுபவத்தால் பார்த்தவர்கள், எதிர்காலத்தைக் குறித்து அதிக நம்பிக்கையுள்ளவர்களாய் இருப்பார்கள். ஒரு பயங்கரமான சூழ்னிலையை சில நிமிடங்களிலேயே ஒரு அற்புதமான சாட்சியாக மாற்ற இயலும் என்பதை அறிந்திருக்கின்றனர்.
மாறாக நம்பிக்கை இழந்தவர்கள், வாழ்க்கையை பயம் நிறைந்த கண்ணோட்டத்தில் காண்கின்றனர். பயம் என்பது வாழ்க்கையை அனுபவிக்கும் திறனை திருடி, எதிர்காலத்தைப் பற்றிய பயத்தால் மக்களை கவலையில் ஆழ்த்துகிறது. நம்பிக்கையானது பயத்திற்கு எதிரானது. விசுவாசத்தின் நெருங்கிய உறவாகும். தேவன் பேரில் நமக்கு விசுவாசம் இருக்குமென்றால் அது நம்பிக்கையை அளிக்கிறது. வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வையும், எதிர்காலத்தைப் பற்றிய நம் பார்வையும் நேர்மறையானதாக இருக்கும்.
நம்பிக்கையானது விடை கிடைக்காத கேள்விகளை தேவனிடத்தில் விட்டு விட செய்கின்றது. அது நாம் சமாதானமாயிருக்க நமக்கு பெலனளிக்கிறது. வரவிருக்கும் நாட்களைப் பற்றி நேர்மறையாக நம்ப ஏதுவாக்குகின்றது.
தேவனுடைய அன்பை நீங்கள் நம்பும் போது நம்பிக்கையை கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு சூழ்னிலையுனூடாகவும் உங்கள் தேவைகளை சந்தித்து உங்களை நடத்திச் செல்ல வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
ஜெபம்
தேவனே, உம்மீதுள்ள விசுவாசம், என்னை நம்பிக்கைக்குள்ளாக நடத்தும் என்பதை அறிந்தவளாக இருக்க தெரிந்து கொள்கிறேன். நீர் என்னை பராமரிக்கக் கூடியவராக இருப்பதால் நான் அஞ்ச வேண்டியதில்லை. எனவே என் நம்பிக்கையை உம்மீது வைக்கிறேன்.