“ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.” – சங்கீதம் 3:3
கடவுள் உங்களுக்காக நல்ல திட்டங்களைக் கொண்டுள்ளார். உங்கள் வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நீங்கள் கனமான, விரக்தியான, மனச்சோர்வுடன் அல்லது ஊக்கம் இல்லாத மனநிலையுடன் வாழ அவர் விரும்பவில்லை. நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் கடவுளைப் பார்த்து, அவர் உங்களை உயர்த்த அனுமதிக்கும்போது, உங்கள் மனப்பாண்மையும், கண்ணோட்டமும் மாறக் கூடும்.
சங்கீதக்காரன், கடவுள் என் கேடயம், என் மகிமை, என் தலையைத் உயர்த்துபவர் என்று கூறினார். “என் தலையைத் உயர்த்துபவர்” என்ற சொற்றொடரைப் பற்றி சிந்தியுங்கள். யாரோ ஒருவர் தலையைக் கீழே தொங்கவிட்டு நடக்கும்போது, அவர் சோகமாக அல்லது மனச்சோர்வடைந்துள்ளனர் என்று நாம் கருதுகிறோம். அப்படியாக இன்று நீங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்களென்றால், தேவன் உங்கள் தலையையும், ஆவியையும் உயர்த்த முடியும் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
நினைவில் வைத்து கொள்ளுங்கள், தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல திட்டத்தை, ஒரு நல்ல எதிர்காலத்துடனும், நம்பிக்கையுடனும் வைத்துள்ளார். அவர் நம்முடன் இருப்பதால், நாம் அவருடைய சித்தத்திற்கேற்ப பேசவும், சிந்திக்கவும் முடியும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நேர்மறையாக இருப்பதை நாம் பயிற்சி செய்யலாம். நம்முடைய சூழ்நிலைகள் சவாலானதாகவும், கடினமானதாகவும் இருக்கும்போது, கடவுள் தம்முடைய வார்த்தையில் வாக்குறுதியளித்தபடியே அவற்றிலிருந்து நண்மையை வெளியே கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஜெபம்
தேவனே, நீர் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். நான் உம்மை நோக்கிப் பார்ப்பதை தேர்வு செய்கிறேன். உம்மிடம் என் கவனத்தை வைத்திருக்க எனக்கு உதவும். இன்று என் வாழ்க்கையில் உம்முடைய நல்ல திட்டங்களை கொண்டு வருவீர் என்று நம்புகிறேன்.