“நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” – ஏசா 43:2
நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் பொய்களில் ஒன்று, நாம் அனைவரும் தனியாக பிசாசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதே என்று நான் நம்புகிறேன். பிசாசு நம்மை தனிமைப்படுத்தி, நாம் அனுபவிக்கும் போராட்டத்தைப் போல வேறு எவரும் போடாடுவதில்லை என்பதாக நினைக்க வைப்பான்.
உண்மை என்னவென்றால், நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் மட்டும் சோர்வடையவில்லை. சாத்தானின் பொய்களை நின்று எதிர்ப்பதிலும், உங்கள் சொந்த உணர்வுகளை எதிர்ப்பதிலும் நீங்கள் மட்டும் போரடவில்லை. உங்களைப் போலவே விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை நானும் போராட வேண்டும். எதிரிக்கு எதிரான போராட்டத்தில் எண்ணற்ற பிற விசுவாசிகளும் உங்களுடன் நிற்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு அடியிலும் தேவன் உங்களுடன் இருக்கிறார். ஏசாயா 43:2, தேவன் தாமே நமக்கு முன்னே செல்வதால், நாம் சோதனை காலத்தை கடந்து செல்வோமென்று வாக்களிக்கிறது. நாம் தண்ணீர்களை கடக்கும்போது, நாம் மூழ்கி விட மாட்டோம். அக்கினியின் ஊடாக கடந்து செல்லும்போது, நாம் எரிந்து போக மாட்டோம், ஏனென்றால் அவர் நம்முடன் இருக்கிறார்.
எனவே உற்சாகமடையுங்கள், தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் தேவையான பெலத்தையும், ஞானத்தையும் கடவுள் உங்களுக்கு தருவார்.
ஜெபம்
தேவனே, எதிரிக்கு எதிராக போராடும் என்னுடனும் மற்றவர்களுடனும் இருப்பதற்காக உமக்கு நன்றி. நான் தனியாக இருக்கிறேன் என்று சொல்லும் பொய்யை நான் நம்ப மாட்டேன். நீர் எப்போதும் எங்களுடன் இருப்பதற்கும், தேவைப்படும் போது எங்களுக்கு உதவுவதற்கும் நீர் உண்மையுள்ளவராயிருக்கிறீர்.