
ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான் (யாக்கோபு 1:6)
புதிய ஏற்பாட்டில் யாக்கோபு எழுதிய நிருபத்தை நாம் படிக்கும் போது, வாழ்க்கையின் பிரச்சினைகளையும், சோதனைகளையும் எவ்வாறு கையாள்வது என்பதை யாக்கோபு நமக்குத் தெளிவாக விளக்கிக் காண்பிப்பதை காணலாம். இந்த விஷயங்களைக் கையாள்வதில் இயற்கையான ஒரு வழி உண்டு, ஆனால் அவற்றைக் கையாள ஆவிக்குறிய வழியும் உள்ளது.
யாக்கோபு 1:5-6 இல், யாக்கோபு அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார், “உங்களுக்கு பிரச்சினை இருந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கடவுளிடம் கேளுங்கள்.” நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்காமல், உடனடியாக பதிலைப் பெறாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் நம்பிக்கையுடன் கேட்டால், உங்கள் தொழிலில் தெய்வீகமான மற்றும் இயற்கை அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு ஞானம் உங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
சங்கீதம் 23:2 இல், கடவுள் தம் மக்களை பசுமையான மேய்ச்சல் நிலங்களுக்கும், அமைதியான நீரூற்றண்டைக்கும் கொண்டு செல்கிறார் என்று சங்கீதக்காரன் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் அவரைத் தேடினால், கடவுள் எப்போதும் நம்மை அமைதி மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வார்.
இன்றைய வசனத்தை திரும்பிப் பாருங்கள், நாம் விசுவாசத்துடன் கேட்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். பெரும்பாலும் நாம் உதவியைப் பெறுவதில்லை, ஏனென்றால் நாம் அதைக் கேட்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் பண்புள்ளவர்; நாம் அவரை நம் சூழ்நிலைகளுக்கு அழைக்கும் வரை அவர் காத்திருக்கிறார். நாம் கேட்க வேண்டும்!
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்களுக்கு ஏதாவது தேவைப்படும்போது, கடவுளிடம் கேளுங்கள்.