
“நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.” – பிலி 3:12
அனேகர் தவறு செய்து விடுவோமென்று அதிகமாக பயப்படுவதால் அவர்கள் எதையும் செய்கிறதில்லை. மாறாக அவர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டு ‘நான் தவறாக செய்து விட்டால் என்னாகும்? தேவனை இழந்து விடுவேனா?’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
ஒருமுறை தேவன் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? நீ என்னை இழந்து விட்டால் என்ன, நான் உன்னை கண்டுபிடிப்பேன் என்றார்.
நாம் எங்கே இருக்கிறோம் என்று அறியாமல் அலைந்து கொண்டேயிருப்போமேயென்றால் நாம் நம் கரங்களை உயர்த்தி, ‘இயேசுவே, நீர் வந்து என்னை ஏற்றுக் கொள்ளும்’ நான் குழம்பிப் போயிருக்கிறேன். தவறான தீர்மாணம் செய்து விட்டேனென்று நினைக்கிறேன் என்று சொன்னால் போதுமானதே.
நாம் பரிபூரணராக இருக்க இயலாது என்று தேவன் அறிந்திருக்கிறார், எனவே அவரது குமாரனை பரிபூரணமான பலியாக அனுப்பினார். இப்போது நாம் அந்த பரிபூரணத்திற்கு நேராக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பிலி 3லே அப். பவுல் பின்னானவைகளை மறந்து முன்னானவைகளையே நாடுகிறேன் என்று சொல்கிறார்.
இன்று அவர், உங்களை முன்னோக்கி செல்ல அழைக்கிறார். தவறுகள் செய்து விடுவோமென்ற பயத்துடன் வாழ்வதை நிறுத்துங்கள். ஏனென்றால் எப்போதுமே தவறுகள் செய்கின்றோம். தேவன் உங்களிடம் தவறுகள் செய்யாமலிருக்க சொல்லவில்லை. நீங்கள் முன்னோக்கி செல்ல அவர் உங்களை அழைக்கிறார். நீங்கள் அவரை நோக்கி கூப்பிட வேண்டுமென்று சொல்கிறார். உங்கள் பரிபூரணமற்ற பயத்தில் வாழாதீர். உங்களுக்கான தேவனுடைய பரிபூரணமான திட்டத்தைப் பற்றிய விசுவாசத்தில் வாழுங்கள்.
ஜெபம்
தேவனே, என்னுடைய பரிபூரணமற்ற தண்மைகள், தவறுகளைப் பற்றிய பயத்தால் செயலிழந்து வாழ விரும்பவில்லை. உம் மீது என் கவனத்தை வைக்க எனக்கு உதவும். நான் உம்மை நோக்கி கூப்பிடும் போது, பரிபூரண தண்மைக்கு நேராக முன்னோக்கி செல்ல எனக்கு உதவுவீர்.