
“ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.” – பிலி 2:3
உங்களை விட, மற்றவர்களை மேண்மையாக எண்ணும் படி பிலிப்பியர் 2:3 கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் மற்றவர்களை விரும்புவதற்கும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நம்மிடையே ஆவலை வளர்க்க விரும்புகிறார். இருப்பினும், இந்த வழியில் வாழ்வது சில நேரங்களில் நம்மை களைப்படைய செய்யலாம். ஆனால் அதை நாம் எதிர்கொள்ளலாம். நாமாக சென்று பிறருக்கு உதவ விரும்பாத நாட்கள் நம் அனைவருக்கும் உண்டு.
சில சமயங்களில் நான் எப்படி உதவ வேண்டும் என்று நினைக்கிறேனோ அப்படியாக பிறருக்கு உதவ முயன்று மிகவும் களைப்படைகின்றேன். சில நேரங்களில் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் தேவை, என் ஊழியர்களுக்கும் நான் தேவை, என் நண்பர்களுக்கும் நான் தேவை – அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு வழிகளில் நான் தேவைப்படுகிறேன் என்பதைப் போன்று தோன்றுகிறது.
நான் மிகவும் தேவைப்படுகிறவளாக உணர்கிறேனா? ஆம்! நீங்களும் அப்படி உணர்ந்தால் பரவாயில்லை. நாம் அனைவரும் அவ்வப்போது களைப்படைந்தவர்களாக உணர்கிறோம். ஆனால், தேவன் நம்மை என்ன செய்ய வேண்டுமென்று கேட்கிறாரோ அதைச் செய்ய நமக்கு கிருபை தருகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் சோர்வாக உணரும்போது, பிலிப்பியர் 2:3 க்குச் சென்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவும்படி அவரைக் கேளுங்கள். கடவுளுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். அவர் உங்களை உதவச் சொல்லும் அணைவருக்கும் உதவ, உங்களை பெலப்படுத்துவார்.
ஜெபம்
தேவனே, என்னை விட மற்றவர்களை நான் அதிக மேண்மையாக கருத விரும்புகிறேன். நான் கஷ்டப்படுகையில், மற்றவர்களுக்கு உதவ ஆசை இல்லாததால், சோர்வாக உணர்கிறேன். நீர் எனக்கு உதவி கேட்கும் மக்களை நேசிக்கவும், உதவவும் உம்முடைய கிருபையையும், பெலத்தையும் எனக்குக் கொடுத்தருளும்.