“மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையுமில்லை, இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.” – பிர 2:24
ஒரு நல்ல அணுகுமுறையுடன், ஒரு முயற்சியின் முடிவை அடைய நமக்கு தேவைப்படும் எரிபொருள் ரசனையாகும். நம்முடைய பிரயாணத்தை கொண்டாட நாம் நேரம் எடுத்துக் கொள்ளா விட்டால், நாம் கசப்பாகி கோபமடையக்கூடும். அனேகர் தொடர்ந்து வேலை செய்து, தங்களை தாங்களே மன அழுத்தத்திற்குள்ளாக்கி கொள்கின்றனர். வேலை செய்வதைப் பற்றியும், வாழ்க்கையை ரசிப்பதைப் பற்றியும் தேவன் தெளிவாக கட்டளை கொடுத்து நியமித்திருக்கும் போது, வாழ்க்கையை ரசிப்பதைப் பற்றியும், கொண்டாடுவதைப் பற்றியும் குற்ற உணர்வடைகின்றனர்.
பிரசங்கி 2:24 கூறுகிறது, கடின உழைப்பின் மத்தியில் நம்மை நிதானமாக அனுபவிப்பது நல்லது. இந்த பகுதியில் நம் சிந்தனை உருவிழந்து காணப்படுகிறது. சாத்தான் நம்மை வஞ்சித்து விடுகிறான். அவ்வாறு செய்வதன் மூலம், அவன் மக்களை சோர்வடையச் செய்து, களைப்புற்றவர்களாகவும், நலிவடைந்தவர்களாகவும், வெறுப்புடனும், அதிகப்படியான வேலை பளுவினாலும் அமிழ்ந்து போக செய்து விடுகிறான்.
நமக்கு புத்துணர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நேரங்கள் தேவை. தேவன் உங்களுக்கு முன்னால் வைத்திருக்கும் எந்தப் பணியிலும் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நீங்களே வெகுமதி அளிப்பதற்கும், ஆரோக்கியமான சமநிலையைக் கண்டறிவதற்கும், கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அதற்கு தகுதியானவர்கள் என்று கடவுள் நினைக்கிறார்!
ஜெபம்
கடவுளே, நீங்கள் எனக்குக் கொடுத்த வாழ்க்கையை நான் அனுபவிக்க விரும்புகிறேன். எப்படி கடினமாக உழைக்க வேண்டும் என்பதையும், அப்படி செய்யும் போது எப்படி இளைப்பாறி எனது முன்னேற்றத்தைக் கொண்டாடுவது என்பதையும் எனக்கு காண்பியும். கிறிஸ்துவுக்குள் அந்த அபரிவிதமான ஜீவனுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்!