தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். (புலம்பல் 3:25)
நாம் ஜெபித்து, நமக்கு என்ன வேண்டும், தேவை அல்லது ஆசை என்பதை கடவுளிடம் கேட்ட பிறகு, நாம் எதிர்பார்ப்புடன் காத்திருக்க வேண்டும். நாம் நம்பிக்கை நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். இது ஏதாவது நல்லது நடக்கும் என்ற மகிழ்ச்சியான மற்றும் நம்பிக்கையான எதிர்பார்ப்பு. என்னுடைய குழந்தைப் பருவத்திலும், முதிர் வயதிலும், பல வருடங்கள் ஏமாற்றமடைந்த பிறகு, வேதம், தீய முன்னறிவிப்புகள் என்று அழைக்கப்படுவதை நான் பெற்றிருந்தேன் (நீதிமொழிகள் 15:15 ஐப் பார்க்கவும்). அதாவது மோசமான செய்திகளையே, நான் பெரும்பாலும் எதிர்பார்த்திருந்தேன். பலர் மீண்டும் ஏமாற்றமடைய விரும்பாததால், நல்லதை எதிர்பார்க்க பயப்படும் வலையில் சிக்கியுள்ளனர் என்று நான் நம்புகிறேன். கடவுள் நல்லவர் என்பதால் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து நல்ல விஷயங்களை மிக அதிக ஆர்வமாக எதிர்பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்.
செயலற்றவர்களாக இருக்க வேண்டாம். நல்லது நடக்க வேண்டும் என்று விருப்பன் மட்டும் கொண்டிருக்கும் ஒரு செயலற்ற நபர், என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதைத் தவிர, வேறு எதையும் செய்யப் போவதில்லை. இன்றைய வசனம் காத்திருக்கச் சொன்னாலும், எதிர்பார்ப்புடன் காத்திருக்கச் சொல்கிறது. நான் என் சார்பாக வேலை செய்ய கடவுளுக்கு காத்திருக்கும் போது, வேதவசனங்களை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். அவைகள் அவருடைய வாக்குறுதிகளை எனக்கு நினைவூட்டுகிறது. மேலும் அவைகள் என்னை உற்சாகப்படுத்துகிறது. கடவுளுடைய வார்த்தை படைப்பு சக்தியால் நிரம்பியுள்ளது. அது விசுவாசத்தில் பேசப்படும்போது, அறுவடையைக் கொண்டுவரும் விதைகளை விதைப்பதற்கு சமம்.
நீங்கள் ஜெபித்திருந்தால், பதிலுக்காக நீங்கள் திட்டமிட்டதை விட அதிக நேரம் காத்திருப்பதைக் கண்டால், நீங்கள் பொறுமையற்றவர்களாக இருக்கும் போது அவர் கிரியை செய்கிறார் என்பதற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கடவுளிடம் சொல்லுங்கள். உங்கள் முன்னேற்றத்தை எதிர்நோக்குங்கள். நீங்கள் காத்திருக்கும் போது புகார் மற்றும் முணுமுணுப்பு வலையில் விழ வேண்டாம். உங்களுக்கு பதில் வரும் என்று மகிழ்ச்சியுடன் நம்பிக்கையுடன் இருங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: சோர்வடைய வேண்டாம். கடவுள் கிரியை செய்கிறார், அதன் முடிவுகளை நீங்கள் விரைவில் காண்பீர்கள்.