நீங்கள் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய ஈவு

நீங்கள் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய ஈவு

“ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.” – லூக்கா 6:36

செய்யத்தக்க பெரிய காரியம் இது தான். நான் அதைப் பற்றி எவ்வளவு அதிகமாக நினைக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக ஆச்சரியப்படுகிறேன். இது தகுதியற்ற ஆசீர்வாதங்களை அளிக்கிறது மற்றும் தகுதியான தண்டனையை நிறுத்துகிறது. நீங்கள் ஒருவருக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய ஈவு இதுதான்.

இந்த பரிசு இரக்கம் என்று அழைக்கப்படுகிறது. பாருங்கள், இயேசு பூமிக்கு வந்து நமக்கு இரக்கத்தை கொடுத்தார். எனவே மற்றவர்களுக்கு இரக்கத்தைக் காட்ட நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவின் முன்மாதிரியால், நாம் நம்முடைய எதிரிகளை நேசிக்கவும், ஜெபிக்கவும் கற்றுக் கொடுக்கப்படுகிறோம். நாம் எப்படி நடத்தப்பட வேண்டுமென்று விரும்புகிறோமோ அப்படி நம்மை நடத்தாதவர்களிடம் நட்பாக இருக்க கற்பிக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு ஒருபோதும் திருப்பி கொடுக்க முடியாத ஏழை மற்றும் உதவியற்றவர்களுக்கு கொடுக்கவும், அவர்களைக் கவனித்துக்கொள்ளுமாறும் சொல்லப்பட்டிருக்கிறது.

பதிலுக்கு நமக்கு வெகுமதியை வழங்கும் நபர்களுக்கு நாம் கொடுக்க முடியும். ஆனால் முடியாதவர்களுக்கு கொடுக்கத் தேர்ந்தெடுக்கும் போது நாம் மிகவும் பாக்கியவான்களாகிறோம். அதுவே இரக்கத்தைக் கொடுப்பதாகும்.

நீங்கள் கடவுளுக்குக் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பரிசு இயேசுவைப் போலவே மாற வேண்டும். அவர் உங்களை நடத்திய விதத்தில் மற்றவர்களை நீங்கள் நடத்துவதின் மூலம் நீங்கள் அதைச் செய்யலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு, அவர்கள் உங்களிடமிருந்து பெறக்கூடிய மிகப் பெரிய பரிசாகிய இரக்கத்தைக் கொடுங்கள்.


ஜெபம்

கடவுளே, ஒவ்வொரு நாளும் தன்னலமின்றி எனக்குக் நீர் கொடுக்கும் இரக்கத்திற்காக நன்றி. அந்த இரக்கத்தை மற்றவர்களுக்கு கொடுக்க நான் இப்போது தேர்வு செய்கிறேன். எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும், நீர் எனக்குக் காட்டிய இரக்கத்தை அவர்களுக்குக் காண்பிப்பேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon