
“பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” – லூக்கா 17:1
சோதனையானது அல்லது சோதனைக்கு இணங்கி விடுவது என்பது காலத்தின் தொடக்கத்திலிருந்தே ஒரு கடுமையான பிரச்சினையாக இருந்து வருகிறது, இன்றும் அது நம் வாழ்வில் உண்மையான பங்கு வகிக்கிறது. பிடிக்கிறதோ, இல்லையோ, நாம் அனைவரும் அதைச் சமாளிக்க வேண்டும். லூக்கா 17:1 ல், இயேசு சொன்னார், சோதனைகள் (வலைகள், பாவத்தை கவர்ந்திழுக்கும் பொறிகள்) நிச்சயம் வரும்.
ஆனால் நாம் ஏன் சோதனையை சமாளிக்க வேண்டும்? ஏனென்றால், அது நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்துகிறது – அல்லது நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையை பெலப்படுத்துகிறது. நாம் சோதனையை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றால், நம்முடைய சொந்த ஆவிக்குறிய வலிமையை ஒருபோதும் அறிய மாட்டோம். ஆவிக்குறிய வலிமையை வளர்த்துக், கொள்ள அனைத்து வகையான சோதனைகளையும் நாம் கடக்க வேண்டும்.
லூக்கா 4-ல், சாத்தான் இயேசுவை சோதித்ததைக் காண்கிறோம், அவன் ஒரு பலவீனமான பகுதியைக் கண்டுபிடிக்கலாம் என்று நம்புகிறான். ஆனால் இயேசு உறுதியாக நின்று சத்துருவை தோற்கடித்தார். இயேசு சோதனையடைந்த போது செய்ததையே நீங்களும் செய்ய நான் உங்களை ஊக்குவிக்கிறேன். அவர் நேராக கடவுளுடைய வார்த்தைக்குச் சென்றார். இயேசு சோதனையில் வெற்றி பெறுவார் என்பதை கடவுள் முன்பே அறிந்திருந்தார், அவர் நம்மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றினால், நாம் சோதனையை வென்று, நம்முடைய பல சோதனைகளையும் கடந்து செல்வோம்.
ஜெபம்
தேவனே, எதிரியின் சோதனையை எதிர்த்து நிற்கவும், சமாளிக்கவும் எனக்கு உதவுகிறதற்காக உமக்கு நன்றி. சோதனை வரும்போது, நான் நேராக உமது வார்த்தைக்குச் சென்று அதை வெல்ல உம்முடைய சத்தியத்தைப் பயன்படுத்துவேன்.