அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். (யோவான் 4:25)
தேவனிடமிருந்து கேட்கவும், பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படவும் கற்றுக்கொள்வது ஒரு அற்புதமான காரியமாகும். உங்கள் வாழ்க்கையை அனுபவிக்கவும், நீங்கள் ஆசீர்வதிக்கப்படவும், ஞானமுள்ளவராக இருக்கவும், உங்களுக்காக அவர் வைத்திருக்கும் நல்ல திட்டங்களை நிறைவேற்றவும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை அவர் சொல்ல விரும்புகிறார். அவர் எப்பொழுதும் நல்லதையும், உதவியாக இருப்பதையும் மட்டுமே கூறுவார், ஆனால் சில சமயங்களில் மக்கள் இந்த காரியங்களைத் தெரிந்து கொள்வதற்கு தவறவிடுகிறார்கள், ஏனென்றால் தேவன் அவர்களிடம் பேசுகிறார் என்பதை அவர்கள் அடையாளம் காணத் தவறிவிடுகிறார்கள். அவருடைய சத்தத்தைக் கேட்பது மற்றும் கீழ்ப்படிவது எப்படி என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
பூமிக்குரிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் எப்போதும் பேசுகிறார்கள், அப்படியானால் ஏன் நம் பரலோகத் தந்தை, நம்மிடம் பேசமாட்டார்? பூமிக்குறிய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லாவிட்டால், என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதில்லை, கடவுளும் தம் பிள்ளைகளிடம் அவ்வாறே உணர்கிறார். வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அவர் சொல்ல விரும்புகிறார்.
நாம் அடிக்கடி நம்முடைய சொந்த வழியில் செல்ல விரும்புகிறோம், அதனால் நாம் என்ன செய்ய விரும்புகிறோமோ அதைச் செய்யலாம். ஆனால், அப்படி வாழும்போது, செல்ல வேண்டிய வழியை இழந்து, வாழ்க்கையையே வீணாக்குகிறோம். பூமியில், ஒவ்வொரு நாளும் நம்மை வழிநடத்த பரிசுத்த ஆவியானவர் தேவை, மேலும் அவர் நம்மிடம் பேசுவதன் மூலமும், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் சொல்வதன் மூலமும் வழி நடத்த உறுதிபூண்டுள்ளார்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: பரிசுத்த ஆவியானவராகிய வழிகாட்டி மற்றும் உங்களை விசாரிப்பவர் உங்களுக்கு உண்டு. அவர் உங்களுடன் இருக்கிறார்.