தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். (யாக்கோபு 4:8)
கடவுளிடம் நெருங்கி இருப்பதற்குத் தேவையான விலைக்கிரயத்தை செலுத்த எல்லோரும் தயாராக இல்லை. ஆவிக்குறிய வளர்ச்சிக்கு தேவையான நேரத்தை செலவிடவோ அல்லது முதலீடு செய்யவோ பலர் தயாராக இல்லை. ஆண்டவர் நம்மிடம் எல்லா நேரத்தையும் கேட்பதில்லை. “ஆவிக்குறியது” என்று நாம் கருதும் விஷயங்களை, நாம் செய்ய வேண்டும் என்று அவர் நிச்சயமாக விரும்புகிறார். ஆவி, ஆத்துமா (மனம், சித்தம் மற்றும் உணர்ச்சிகள்) மற்றும் சரீரத்தைக் கொண்டு, அவர் நம்மை வடிவமைத்தார், இந்த எல்லா பகுதிகளையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
நம் சரீரத்தை பயிற்சி செய்வதற்கும், ஆத்துமாவைப் பராமரிப்பதற்கும் நேரமும், முயற்சியும் தேவை. நமது உணர்வுகளையும் பராமரிக்க வேண்டும்; நாம் சந்தோசமாக இருக்க வேண்டும், மற்றவர்களுடன் இருப்பதை அனுபவிக்க வேண்டும். நம் மனம், தினமும் வளர்ச்சியடைய வேண்டும், புதுப்பிக்கப் பட வேண்டும். கூடுதலாக, நாம் கவனம் செலுத்த வேண்டிய ஆவிக்குறிய இயல்பு ஒன்று உள்ளது. சீராக மற்றும் ஆரோக்கியமாக இருக்க, நம்மை முழுவதுமாக கவனித்துக் கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.
கடவுளுடனான நெருக்கம் நாள்பட நாள்பட வளர்ச்சியடையும் என்று நான் நம்புகிறேன். கடவுளைத் தேட நேரம் இல்லை என்று நாம் கூறுகிறோம், ஆனால் உண்மை என்னவென்றால், நமக்கு மிகவும் முக்கியமான விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குகிறோம். நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் கவனச்சிதறல்களுடன் போராட வேண்டியிருந்தாலும், தேவனை அறிவதும், அவரிடமிருந்து கேட்பதும் நமக்கு முக்கியம் என்றால், அதைச் செய்ய நேரம் கிடைக்கும். உங்கள் கால அட்டவணையில், தேவனை செயல்பட வைக்க முயற்சிக்காதீர்கள், மாறாக உங்கள் கால அட்டவணையை, அவருடைய நேரத்தை சுற்றி அமையுங்கள்.
தேவனைப் பற்றி தெரிந்துகொள்வது ஒரு நீண்ட கால முதலீடாகும், எனவே, உடனடி முடிவுகளைப் பெறவில்லை என்றால் சோர்வடைய வேண்டாம். உங்கள் நேரத்தைக் கொண்டு அவரைக் கௌரவிப்பதில் உறுதியாக இருங்கள், நீங்கள் பலன்களைப் பெறுவீர்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உடற்பயிற்சியைப் போலவே, ஆவிக்குறிய பயிற்சியையும் தவறாமல் செய்ய வேண்டும். நீங்கள் அதன் பலன்களைப் பார்ப்பது உறுதி.