நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. (எபிரெயர் 12:29)
நம் வாழ்வில் தமக்கு மகிமையைக் கொண்டு வராத அனைத்தையும் அழித்துப் போட கடவுள் விரும்புகிறார். விசுவாசிகளாகிய நமக்குள் வாழ்வதற்கும், நம்முடன் நெருங்கிய உறவில் இருப்பதற்கும், நமது ஒவ்வொரு தவறான எண்ணம், சொல், அல்லது செயலின் மீது ஒரு எச்சரிப்பை கொண்டு வரவும் அவர் பரிசுத்த ஆவியை அனுப்பினார். நாம் அனைவரும் “சுத்திகரிப்பின் நெருப்பின்” வழியாக செல்ல வேண்டும் (மல்கியா 3:2). சுத்திகரிப்பின் நெருப்பின் வழியாக செல்வதன் அர்த்தம் என்ன? கடவுள் நம்மை சரி செய்வார் என்று அர்த்தம். நம்முடைய மனப்பான்மை, ஆசைகள், வழிகள், எண்ணங்கள் மற்றும் உரையாடல்களை மாற்றுவதற்கு அவர் வேலை செய்வார். நம் இருதயத்தில் அவருக்குப் பிடிக்காத காரியங்களைப் பற்றி அவர் நம்மிடம் பேசுவார். மேலும் அவருடைய உதவியுடன் எல்லாவற்றையும் மாற்றும்படி, அவர் நம்மைக் கேட்பார். நாம் நெருப்பிலிருந்து விலகி ஓடுவதற்குப் பதிலாக அதன் வழியாகக் கடந்து செல்பவர்கள். இறுதியில் கடவுளுக்குப் பெரிய மகிமையைக் கொண்டு வருபவர்கள்.
நெருப்பின் வழியே செல்வது பயமாக இருக்கும். இது வலியையும் மரணத்தையும் கூட நமக்கு நினைவூட்டுகிறது. ரோமர் 8:17ல், கிறிஸ்துவின் மகிமையைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால், அவருடைய துன்பத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பவுல் கூறினார். இயேசு எப்படி துன்பப்பட்டார்? நாமும் சிலுவைக்குச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோமா? பதில் ஆம் மற்றும் இல்லை. நம்முடைய பாவங்களுக்காக நாம் உடல் ரீதியாக சிலுவையில் அறையப்பட வேண்டியதில்லை. ஆனால் மாற்கு 8:34 இல், நாம் நம்முடைய சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசு கூறினார். சுயநல வாழ்க்கை முறையை ஒதுக்கி வைப்பதைப் பற்றி அவர் பேசினார். நாம் சுயத்திற்கு சாக வேண்டும் என்று வேதம் சொல்கிறது. என்னை நம்புங்கள், சுயநலத்திலிருந்து விடுபடுவதற்கு சில நெருப்பு தேவைப்படுகிறது – பொதுவாக அது நிறைய. ஆனால் நாம் நெருப்பின் வழியே செல்ல தயாராக இருந்தால், கடவுளை மகிமைப்படுத்துவதன் மகிழ்ச்சியை பின்னர் அறிந்துகொள்வோம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் உங்களை மிகவும் நேசிக்கிறார். அவர் திரும்பி வரும் நாள் வரை உங்களில் தொடர்ந்து கிரியை செய்வார்.