மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். (மத்தேயு 3:11)
விசுவாசிகளாக, ஞாயிற்றுக்கிழமை காலை தேவாலயத்திற்குச் செல்வதை விடவும், பரிந்துரைக்கப்பட்ட சடங்குகளைப் பின்பற்றுவதை விடவும், நிச்சயமாக நம் தலையில் தண்ணீரைத் தெளிப்பதை விடவும் அல்லது ஞானஸ்நானக் குளங்களில் மூழ்குவதை விடவும் அதிகமாகச் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். இவை அனைத்தும் மிகவும் முக்கியமானவை மற்றும் புறக்கணிக்கப்பட வேண்டியவை அல்ல. ஆனால் அவை “அக்கினி ஞானஸ்நானத்தை” அனுபவிக்கும் விருப்பத்துடன் பின்பற்றப்பட வேண்டும்.
யாக்கோபு மற்றும் யோவானின் தாயார், அவருடைய மகன்கள், இயேசுவின் ராஜ்யத்திற்குள் வரும் போது ஒருவரை அவருடைய வலது புறத்திலும் ஒருவரை இடதுபுறத்திலும் உட்கார முடியுமா என்று கேட்டதற்கு (மத்தேயு 20:20-21 ஐப் பார்க்கவும்), அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை என்று இயேசு பதிலளித்தார். “நான் குடிக்கப் போகும் பாத்திரத்தில் உங்களால் குடிக்க முடியுமா, நான் பெற்ற ஞானஸ்நானத்தானத்தைப் போன்று உங்களால் ஞானஸ்நானம் பெற முடியுமா?” என்றார். (மத்தேயு 20:22).
இயேசு எந்த ஞானஸ்நானத்தைப் பற்றி பேசினார்? அவர் ஏற்கனவே ஜோர்டான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார் மற்றும் அதே நேரத்தில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றார் (மாற்கு 1:9-11 ஐப் பார்க்கவும்).
வேறு என்ன ஞானஸ்நானம் இருக்கிறது?
இயேசு அக்கினி ஞானஸ்நானம் பற்றி பேசுகிறார். நெருப்பு, சுத்திகரிப்பு செய்கிறது. அது, அதன் வேலையைச் செய்யும் போது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இயேசு பாவமற்றவர், ஆகையால், சுத்திகரிக்கப்பட வேண்டிய அவசியமில்லை; ஆனால் அது நமக்கு தேவை. பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் நமக்கு ஞானஸ்நானம் கொடுப்பவர் இயேசுவே.
அவருடைய அக்கினியால் உங்களை ஞானஸ்நானம் செய்யும்படி இயேசுவிடம் கேட்க தைரியமாக இருங்கள். உங்களில் ஒரு சுத்திகரிப்பு வேலையைச் செய்யும்படி அவரிடம் கேளுங்கள். அதனால் நீங்கள் அவருடைய பயன்பாட்டிற்கு ஏற்ற பாத்திரமாக இருக்க முடியும். கடந்து செல்வது கடினமாக இருக்கலாம், ஆனால் அது திருப்திகரமான வெகுமதியைக் கொண்டுவரும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் நெருப்பின் வழியாகச் செல்லும் போது கடவுள் உங்களோடு இருப்பார். அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.