“அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.” – நீதி 23:7
நம்மைப் பற்றி நாம் ஆரோக்கியமான, நேர்மறையான எண்ணங்களை எண்ணுவது எவ்வளவு முக்கியமானது என்று வேதாகமம் நமக்கு காட்டுகின்றது. நீங்கள் எப்போதுமே எதிர்மறையான எண்ணங்களை எண்ணுவீர்களேயென்றால் வாழ்க்கையை விரும்ப மாட்டீர்கள். இதிலே நீங்கள் போராடிக் கொண்டிருப்பீர்களேயென்றால், உங்கள் எண்ணங்களை மாற்ற மனதில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நேர்மறை சிந்தனையாளராவதற்கான சிறந்த வழியைக் கண்டு பிடித்திருக்கிறேன். அது தேவனிடம் அதிகமான உதவியை அடிக்கடி கேட்பதாகும்.
எதிர்மறையாக இருப்பது ஒரு பிரச்சனை என்று ஒப்புக்கொண்டு அதற்கான உதவியை தேவனிடம் கேட்பதுதான் எதிர்மறையில் இருந்து விடுபடும் கடினமான பகுதியாகும். ஆனால் ஒருமுறை அப்படி செய்வீர்கள் என்றால் அதனை நீங்கள் மேற்கொள்வீர்கள். ஏனென்றால் வேதாகமத்தை பொறுத்தவரையில் நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய மனுஷன் (2 கொரி 5:7).
அநேகர் நம்பிக்கையைக் கொண்டிருக்க பயப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் வாழ்க்கையிலே மிகவும் மனக் காயமுற்று இருக்கின்றனர். அவர்கள் தத்துவம் என்னவென்றால் “நான் நன்மை ஏதாவது நடக்கும் என்று எதிர்பாராமல் இருப்பேன் என்றால், அப்படி ஆகும்போது நான் ஏமாற்றம் அடைய மாட்டேன்.”
அப்படித்தான் நானும் நினைத்தேன். நான் என் வாழ்க்கையிலே அனேக ஏமாற்றங்களை சந்தித்து இருந்ததால் நேர்மறையாக இருக்க பயப்பட்டேன். நான் வேதத்தை படித்து, தேவன் என்னை மறுசீரமைக்க அவரை நம்பின போது என் எதிர்மறையான எண்ணங்கள் எல்லாம் சென்றுவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
நாம் எல்லா சூழ்னிலையிலும் நேர்மறையான எண்ணங்களை அப்பியாசப் படுத்த வேண்டும். நீங்கள் கடினமான சமயங்களின் ஊடாக சென்று கொண்டு இருப்பீர்கள் என்றால், தேவன் அவற்றை உங்களுக்கு நன்மையாக மாற்றித் தருவார் என்று எதிர்பாருங்கள். ஒரு கிறிஸ்தவனாக உங்கள் எண்ணங்களுக்காக போராட வேண்டிய நேரம் இது. ஏனென்றால் உங்கள் மனம் தானாகவே தேவனுடைய திட்டத்தோடு இணைந்து கொள்ளாது.
தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து, அதை உங்கள் சிந்தை, வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று உங்களை உற்சாகப்படுத்து கிறேன். உங்கள் எண்ணங்கள் அவருடன் ஒத்துக் செல்வதற்கு, அவர் உங்களுக்கு உதவ, அவருக்கு நேரம் கொடுங்கள். நான் எப்படி அதிக நேர்மறையானவளாக இருக்க முடியும் என்று அவர் காட்டினார். நீங்கள் எப்படி அவ்வாறாக அவ்வாறாக இருக்கலாம் என்று காட்டுவார்.
ஜெபம்
தேவனே நான் எதிர்மறையான எண்ணங்களோடு போராடுகிறேன் என்று ஒத்துக் கொள்கிறேன். எனக்கு உன்னுடைய உதவி வேண்டும். உம்முடைய வார்த்தையோடு என் எண்ணங்களை நேராக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீர் என் நன்மைக்காகவே காரியங்களை செய்கிறீர் என்று எனக்கு நினைவுறுத்தும்.