“நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.” – சங்கீதம் 56:3
பயம் தேவனிடமிருந்து வருவது அல்ல. அது சாத்தானிடமிருந்து வருகிறது. எனவே உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் நீங்கள் பயத்தை உணரும்போது, சத்துரு உங்களுக்கு எதிராக வருகிறான். நான், பயம் ஒரு “தலையாய ஆவி” என்று என் போதனைகளில் அடிக்கடி சொல்வேன். சாத்தான் இந்த ஆவியைத்தான் பயன்படுத்தி, தேவனுடைய மக்களாகிய நாம், உண்மையான எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் தலைமையின் கீழ் வருவதை தடுக்கிறான்.
பலர், தங்கள் வாழ்வில் தேவனுடைய அழைப்பை நிறைவேற்றுவது கிடையாது. ஒவ்வொரு முறையும் அவர்கள் முன்னோக்கி செல்ல முயற்சிக்கும்போது, பிசாசு பயத்தை பயன்படுத்தி அவர்களைத் தடுத்து விடுகின்றான். அவன் உங்களைத் தடுத்து நிறுத்த பயத்தைப் பயன்படுத்துகிறானா? வாழ்க்கையை அனுபவிப்பதைத் தடுக்க சாத்தான் பயத்தைப் பயன்படுத்துகிறான். பயம் வேதனையைத் தருகிறது. நிச்சயமாகவே நீங்கள் ஒரே நேரத்தில் வாழ்க்கையை அனுபவிக்கவும், உபத்திரப்படவும் முடியாது.
பிசாசு பயத்தைக் கொண்டு வ்ரும் போது, அதன் முன் மண்டியிடாமலிருப்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். தாவீது, “நான் பயப்படும் போது உம்மை நம்புவேன்”என்று சொன்னார். தேவனை உங்கள் முழு மனதுடன் பின்தொடரவும் அவரைப் பின்பற்றவும் நீங்கள் முயற்சி செய்யும்போது, சத்துருவானவன் பயத்தைக் கொண்டு வந்து உங்களை தாக்குவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருப்பினும், நீங்கள் தேவன் மீது உங்கள் நம்பிக்கையையும், மன உறுதியையும் வைக்கும் போது, உங்கள் பயத்தை நீங்கள் மேற்கொண்டு, முன்னோக்கி செல்ல அவர் உங்களுக்கு உதவுவார்.
ஜெபம்
தேவனே, நான் பயத்தின் முன் மண்டியிட விரும்பவில்லை. நான் என்னுடைய நம்பிக்கையை உம் மீது வைக்கிறேன். பயத்தை எதிர்ப்பதற்கு தேவையான தைரியத்தையும், பெலத்தையும் எனக்குத் தர, நான் உம்மை நம்ப முடியும் என்று எனக்குத் தெரியும்.