“கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.” – ஆதி 12:1
தனக்குள் பயம் இருந்தபோதிலும் தேவனை நம்பிய ஆபிராம் என்ற மனிதரைப் பற்றி வேதம் சொல்லுகிறது. உங்கள் வீடு, உங்கள் குடும்பம் மற்றும் பழக்கமான மற்றும் வசதியான எல்லாவற்றையும் விட்டு விட்டு, தெரியாத இடத்திற்குச் செல்லும்படி தேவன் சொன்னால் நீங்கள் எப்படி உணருவீர்கள்? பயம் நிறைந்தவர்களாகவா? தேவன் ஆபிராமிடம் அதைச் செய்யச் சொன்னார் – அது அவனைப் பயமுறுத்தியது. ஆனால் தேவன் அவனிடம் சொன்ன வார்த்தைகள் “பயப்படாதே” என்பதாகும்.
அனேக சமயங்களில், நாம் இனி பயப்படாமல் ஒரு காரியத்தை செய்ய காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் அவ்வாறு செய்தால், தேவனுக்காகவோ, மற்றவர்களுக்காகவோ அல்லது நமக்காகக் கூட மிகக் குறைவாகவே செய்வோம். தன் பயத்தின் மத்தியிலும், ஆபிராம் விசுவாசத்திலும், தேவனுக்குக் கீழ்ப்படிந்தும் செல்ல வேண்டியிருந்தது.
ஆபிராம் பயந்து இருந்திருப்பானேயென்றால், தேவன், அனேக ஜாதிகளுக்கு தகப்பனாக வைப்பேன் என்ற அவருடைய நோக்கத்தை ஒரு போதும் நிறைவேற்றியிருக்க மாட்டான்.
பயப்படுவது, உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் சிறந்த திட்டத்தை மாற்றுகிறது, எனவே நீங்கள், தேவன் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாரோ அதைச் செய்யுங்கள்… நீங்கள் பயந்து கொண்டே செய்ய வேண்டியிருந்தாலும் கூட! ஆபிராமைப் போலவே, மிகச் சிறந்த பலன்களை நீங்கள் காண்பீர்கள்.
ஜெபம்
தேவனே, ஆபிராம் பயத்தின் மத்தியிலும், உமக்கு கீழ்ப்படிந்தபோது, நீர் அவனுக்கு உண்மையுள்ளராக இருந்தீர். ஆகவே, நானும் பயத்தை எதிர்த்து, என்ன செய்யச் சொன்னாலும் அதைச் செய்ய முடிவு செய்கிறேன்.