நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக. (உபாகமம் 13:4)
நாம் தேவன் சொல்வதைக் கூர்ந்து கவனித்து, அதைக் கேட்க ஆரம்பித்தவுடன், அவர் சொல்வதற்கு கீழ்படிவது முக்கியம். கீழ்ப்படிதல், அவருடனான உறவின் தரத்தை அதிகரிக்கிறது மற்றும் நமது விசுவாசத்தை பலப்படுத்துகிறது. அவரிடமிருந்து கேட்பதையும், அவருக்கு கீழ்ப்படிவதையும், “பயிற்சி சரியானதாக்குகிறது” என்று கூறலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அனுபவத்தைப் பெறும் போது நாம் மேலும் மேலும் நம்பிக்கையடைகிறோம். கடவுளின் வழிநடத்துதலுக்கு முழுமையாக அடிபணியும் நிலையை அடைய நிறைய பயிற்சி தேவைப்படுகிறது. தேவனுடைய வழிகள் சரியானவை.
அவருடைய திட்டங்கள் எப்பொழுதும் செயல்படுகிறது என்பதை அறிந்திருந்தாலும், சில சமயங்களில் தனிப்பட்ட தியாகம் தேவைப்படும் ஒன்றைச் செய்யும்படி அவர் நம்மிடம் சொல்லும் போது, நாம் அறியாமையில் செயல்படுகிறோம், அல்லது தெளிவாகக் கேட்கவில்லை என நினைக்கிறோம், எனவே நடவடிக்கை எடுப்பதற்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
தியாகம் அல்லது தவறு செய்ய பயப்பட வேண்டாம். வாழ்க்கையில் தவறு செய்வதை விட மோசமான பல விஷயங்கள் உள்ளன. இயேசு, “என்னைப் பின்பற்றுங்கள்” என்றார். கடவுளிடம் இருந்து கேட்க நம்மால் முடிந்ததைச் செய்த பிறகு, நாம் உண்மையிலேயே அவருடைய சத்தத்தைக் கேட்கிறோமா இல்லையா என்பதை நாம் “கண்டுபிடிக்க வேண்டும்” என்று நான் உறுதியாக நம்புகிறேன். பயத்தில் பின்வாங்குவது, நம் வாழ்வில் கடவுளிடம் இருந்து கேட்கும் திறனில் முன்னேற ஒருபோதும் அனுமதிக்காது.
“நீ தலைமை தாங்கு, நான் உன்னைப் பின்பற்றுவேன்” என்று அவர் கூறவில்லை. கடவுள் சொல்வதை நாம் விரைவாகச் செய்யலாம் என்பதை நான் கற்றுக்கொண்டேன், ஏனென்றால் நாம் அதைச் செய்யாவிட்டால், பரிதாபமாக இருப்போம் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும்.
நம் குழந்தைகள் நடக்கக் கற்றுக் கொள்ளும்போது, அவர்கள் கீழே விழுந்தால் கோபப்படுவதில்லை. அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்கிறோம். கடவுளும் அதே வழியில் செயல் படுகிறார், நீங்கள் பயப்படாமல், விசுவாசத்துடன் நடந்தால் அவரிடமிருந்து எவ்வாறு கேட்பது என்பதை அவர் உங்களுக்குக் கற்பிப்பார்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கேளுங்கள், பகுத்தறிந்து, தைரியமாக கீழ்ப்படியுங்கள்.