
“உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.” – 1 பேதுரு 1:15
நாம் இப்போது எப்படி வாழ்கிறோமோ, அதைவிட இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக வாழ வேண்டுமென்று நினைக்கிறேன். நாம் பயத்தில் வாழும் அளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் தேவனுக்கேற்ற முறையிலே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பிரமாணங்களை சார்ந்த முறையில் அல்ல.
ஏனென்றால், நம் நண்பர்களாக யார் இருக்கின்றனர், எத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம், எத்தகைய புத்தகங்களை வாசிக்கின்றோம், எத்தகைய இசைகளை நாம் கேட்கின்றோம், பணத்தை எப்படி செலவிடுகின்றோம், நம் நேரத்தைக் கொண்டு என்ன செய்கின்றோம் என்பதைப் பற்றி நாம் ஜாக்கிரதையாக இல்லாதிருப்போமேயென்றால் ஒரு விரயமாக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து விடுவோம்.
கிறிஸ்தவர்களாக நாம் பரிசுத்தத்தை தொடர வேண்டும். நாம் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் என்று உணர வேண்டும். அப்படியென்றால் நாம் தேவனுடைய பயன்பாட்டிற்காக பிரித்து எடுக்கப்பட்டவர்கள். உண்மையிலேயே கிறிஸ்துவை நம் இரட்சகராக ஏற்றும் கொள்ளும் அந்த நொடிப்பொழுதிலே நாம் பரிசுத்த ஆவியால் பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனால் கொடுக்கப்பட்ட நோக்கத்திற்காக பிரித்தெடுக்கப்படுகிறோம். நாம் நம் நோக்கத்தை நிறைவேற்றாமலிருப்போமேயென்றால் வெறுமையையும், விரக்தியையும் உணர்வோம்.
இன்று நீங்கள் பரிசுத்தமாயிருக்கும் நோக்கத்தை தொடருங்கள் என்று உங்களை ஊக்கப்படுத்துகிறேன். சவாலான தீர்மாணங்களை எடுக்க வேண்டிருக்கும் போது, தேவனிடம் கேட்டு, அவர் உங்களுக்காக வைத்திருக்கும் பரிசுத்த பாதையில் செல்ல தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெபம்
இயேசுவே, பரிசுத்த வாழ்க்கையினின்று என்னை விலகிச் செல்ல செய்யும் காரியங்களை நான் அறிந்து கொள்ள எனக்கு உதவுவீராக. உம்முடைய வழினடத்துதலோடு ஜாக்கிரதையாக வாழ விரும்புகிறேன்.