“பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” – ரோமர் 12:19
ஒருவர் நம்மை கோபப்படுத்தும் போது, சாத்தான் நம்மை வருத்தப்பட வைக்க விரும்புகிறான். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எதிரி விரும்புகிறானோ, அதற்கு நேர் எதிரானது, இரக்கத்துடனும், மன்னிப்புடனும் பதிலளிப்பது. ஏனென்றால் அது உங்களை வருத்தப்பட வைக்கும் திட்டத்தை முறியடிக்கிறது. அது இயல்பாக வருவதில்லை. அது எப்போதும் எளிதானதும் அல்ல, ஆனால் நாம் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யும்போது, நம்மால் செய்ய முடியாததை கடவுள் செய்வார்.
ஒருவர் உங்களை கோபப்படுத்தி, உங்கள் மனதை புண்படுத்தும்போது, நம்மில் பலருக்கு இயல்பான பதில், அவர்களை பழிவாங்க வேண்டுமென்பதே. ஆனால் நீங்கள் அப்படி பழிவாங்கினால் உண்மையில் என்ன பெறுவீர்கள்? நீங்கள் அவர்களை கோபப்படுத்துவீர்கள், பின்னர் அவர்களும் உங்களை பழிவாங்க மீண்டும் முயற்சிக்கலாம். இந்த சுழற்சி ஒருபோதும் முடிவதில்லை!
நாம் கோபத்தையே பிடித்துக் கொண்டிருப்போமேயானால், நாம் முட்டாள்தனமாக இருக்கிறோம். நாம் கோபத்தையும் அதை ஏற்படுத்திய மக்களையும் கடவுளிடம் கொடுத்து விட வேண்டும். அவரே அதை கவனித்துக் கொள்ள விட்டு விட வேண்டும். … பழிவாங்குதல் என்னுடையது, நான் பதில் செல்வேன் என்று தேவன் கூறுகிறார்.
கடவுளை நம்புங்கள், அவர் உங்களை கவனித்து பாதுகாப்பார். என்ன நடந்தது என்பதை உங்களால் மாற்ற முடியாது, ஆனால் நீங்கள் அதை தேவனிடம் கொடுக்கும் போது, உங்கள் வாழ்க்கையில் ஏதாவது நல்லது செய்ய அவர் அதைப் பயன்படுத்துவார்.
ஜெபம்
தேவனே, பழிவாங்குதல் உங்களுடையது என்றும், கோபத்தில் மக்களுக்கு நான் திருப்பிச் செலுத்துவதை நீர் விரும்பவில்லை என்றும் நான் நம்புகிறேன். நான் என் கோபத்தை உம்மிடம் கொடுக்கிறேன், நீர் என்னைக் கவனித்துக் கொள்வீர் என்று நம்புகிறேன்.