“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.” – எபி 12:6
தேவனோடு உள்ள ஐக்கியமின்றி இருக்க நான் ஒருபோதும் விரும்புவதில்லை. என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் அவர் என்னுடன் இருக்கவேண்டும்.
அதனால்தான் என் வாழ்விலே பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் தேவனை துக்கப்படுத்தும் காரியங்களையோ அல்லது எங்கள் உறவிலே குறுக்கிடும் காரியங்கள் ஏதேனும் செய்கிறேனா என்பதை, அவர் என்னை அறிந்துகொள்ள செய்கிறார். சரியானது எதுவோ அதை அவர் எனக்கு உணர்த்துகிறார், உறுதிப்படுத்துகிறார்.
நாம் நம் சொந்த பிள்ளைகளை நேசிப்பதை விட தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார். அவர் தம் நேசத்தாலே நம்மை ஒழுக்கப்படுத்துகிறார். நாம் தவறான பாதையில் இருக்கும்போது அதை அவர் நமக்கு அறிவிக்கிறார். தேவைப்படும் என்றால், நம் கவனத்தை பெற்றுக்கொள்ள பல வழிகளில் அதை அறிவிக்கிறார்.
அவருடைய அன்பின் செய்தியானது எல்லா இடத்திலும் உள்ளது. அவர் நம்மை நேசிப்பதால், நாம் அவருக்கு செவிகொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் நாம் நம் வழிகளிலே தொடர்ந்து இருப்போம் என்றால் சிலாக்கியங்களையும், ஆசீர்வாதங்களையும் அவர் நம்மிடம் கொடுக்க மாட்டார். ஏனென்றால் நான் நமக்கு சிறப்பானதை பெற்றுக் கொள்ள, நாம் வளர வேண்டும் என்று விரும்புகிறார்.
நீங்கள் தேவ உணர்த்துதலுக்கு இணங்குவீர்கள் என்றால் அது உங்களை பயத்திற்கு லேயும், வெளியேயும் உயர்த்தி விடும். தேவனுடைய இருதயத்திற்கு நேராக உங்களை நடத்தும். பாவ உணர்வு அடைதல், அவருடனான ஒரு புதிய அளவுக்குள் உங்களை உயர்த்தும். அதை எதிர் காதீர், ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஜெபம்
தேவனே நீர் என்னை நேசிக்கிறீர் என்றும், நான் சிறந்ததை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். நான் பாவம் செய்யும்போதோ, தவறுகள் செய்யும்போதோ என்னை திருத்தி, ஒழுக்கப் படுத்துவதற்காக உமக்கு நன்றி. நான் உம்முடன் எவ்வளவு நெருக்கமாக இருக்க இயலுமோ அவ்வளவாக இருக்க விரும்புகிறேன். எனவே உமக்கும் எனக்கும் இடையே எதுவும் வராதபடி காத்துக் கொள்வீராக. உம்மை நான் நேசிக்கிறேன்!