
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். (மத்தேயு 6:33)
நாம் நீதியையும், சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தேட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அது அவருடைய ராஜ்யமாகும் (ரோமர் 14:17 ஐப் பார்க்கவும்). நாம் சரியான நடத்தையை ஆழமாக விரும்பி, அதைத் தொடர நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அப்படி செய்யும் போது, நமக்குத் தேவையான மற்றும் நாம் விரும்பும் விஷயங்களைக் கொடுப்பதாக அவர் உறுதியளிக்கிறார். நாம் அவரைத் தேட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அவ்வாறு செய்யும் போது அவர் நம்மை ஆசீர்வதிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்.
நமக்கு ஒரு ஆசை இருக்கும் போது, நாம் வெறுமனே கடவுளிடம் கேட்டு, அவரை முழுமையாக நம்ப வேண்டும்; இருப்பினும், பொருளின் மீது ஆசை கொள்வதை நாம் தவிர்க்க வேண்டும். நாம் எதையாவது அதிகமாக விரும்பும்போது, அதின் மேல் அதிகமாக நாம் ஆசைப்படுகிறோம். அது இல்லாமல் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று நினைக்கிறோம். ஒருமுறை ஒரு பெண் இவ்வாறு சொன்னதைக் கேட்டேன், கடவுள் தனக்கு குழந்தைகளைக் கொடுக்கவில்லை என்றால், தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று. திருமண ஆசை குறித்து, திருமணம் ஆகாத பெண்களும் இதே கருத்தைச் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது போன்ற அணுகுமுறைகள் தவறானவை மற்றும் கடவுளை புண்படுத்தும். கடவுளைத் தவிர, நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கும் அனைத்தும் எதிரி நமக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஒன்று. எனவே உங்கள் ஆசைகளை சமநிலையில் வைத்திருக்க மறக்காதீர்கள்.
காரியங்களை நீங்களே செய்ய முயற்சித்து உங்களை துன்புறுத்துவதை விட, ஜெபித்து, கடவுள் அதை வழங்க அனுமதிப்பது மிகவும் சிறந்தது. கடவுள் நல்லவர், அவர் உங்களுக்கு நல்லவராக இருக்க விரும்புகிறார் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே அவர் மீதும் அவருடைய ராஜ்யத்தின் மீதும் உங்கள் கண்களை வைத்திருங்கள். மேலும் அவர் உங்களுக்கு சரியான காரியங்களை வழங்குவதை எதிர்நோக்குங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காய் பெற்றிருக்கும் அனைத்தையும், பிசாசு உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம்.