மக்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள்

மக்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள்

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். (ஏசாயா 43:1)

உங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்க, நீங்கள் போற்றும் ஒரு உடைமை உங்களிடம் உள்ளதா? யாரேனும் ஒருவர் அதை அலட்சியமாகத் தூக்கி எறிவதைப் பார்த்தாலோ அல்லது சேதம் விளைவிப்பதையோ நீங்கள் கண்டால், நீங்கள் வருத்தப்பட மாட்டீர்களா?

நம்முடைய உடைமைகளைப் பற்றி நாம் எப்படி உணருகிறோமோ, அதைப் போலவே கடவுள் தனது உடைமைகளைப் பற்றியும் உணர்கிறார். மக்கள் கடவுளுக்கு உரியவர்கள். அவர்கள் அவருடைய படைப்புகள். அவர்கள் தவறாக நடத்தப்படுவதைக் கண்டு அவருடைய ஆவி வருத்தமடைகிறது.

எல்லோரும் வாழ்க்கையில் ஒரே அழைப்பைப் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் மறுபடியும் பிறந்த ஒவ்வொரு நபரும் கடவுளின் வாரிசு மற்றும் கிறிஸ்துவுடன் ஒரு கூட்டு வாரிசு. ஒவ்வொரு நபருக்கும் சமாதானம், நீதி மற்றும் மகிழ்ச்சிக்கான உரிமை உண்டு; அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவும், கடவுளால் பயன்படுத்தப்படவும் அவருடைய அபிஷேகம் அவர்கள் மூலம் பாய்வதைக் காணவும்.

ஒவ்வொருவருக்கும் தங்கள் ஊழியத்தில் பலனைக் காண சமமான வாய்ப்பு உள்ளது. ஆனால் மற்றவர்களை நேசிப்பதற்கான அவர்களின் விருப்பத்திற்கும், அவர்கள் எவ்வளவு பலனைப் பார்க்கப் போகிறார்கள் என்பதற்கும் நிறைய தொடர்பு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசினார்: “மக்கள் அன்பில் நடக்காததற்கு ஒரு முக்கிய காரணம், அதற்கு முயற்சி தேவை. எப்போது அவர்கள் அன்பில் நடந்தாலும், அதற்கு விலைகிரயம் உண்டு.”

அன்பு, நாம் சொல்ல விரும்பும் சில விஷயங்களைத் தடுக்க வேண்டும். நாம் செய்ய விரும்பும் சில விஷயங்களைச் செய்யாமல், வைத்திருக்க வேண்டும் என்று அன்பு கோருகிறது. அன்பு, நம்மை மக்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது.

உறவுகள் எப்போதும் எளிதானது அல்ல, ஆனால் அவை எப்போதும் கடவுளுக்கு முக்கியமானவை. ஏனென்றால் அவர் மக்களை மதிக்கிறார். நாம் அவரை துக்கப்படுத்தாதபடி, கடவுள் அவர்களை நேசிக்க விரும்புவதைப் போல, நாம் மக்களை நேசிக்க தேவையான முயற்சிகளையும் தியாகங்களையும் செய்ய வேண்டும்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் மக்களைத் தனது சொந்த பொக்கிஷங்களாகப் பார்க்கிறார். எனவே நீங்கள் அவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon