“என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” – சங்கீதம் 27:10
நம் அனுதின வாழ்விலே நாம் சந்திக்கும் மக்களில் அனேகர், தேவனுடைய பிள்ளைகளாக, அவர்களுக்கிருக்கும் நித்திய மதிப்பை பற்றி அறிவு எதுவும் இல்லாதவர்களாக இருக்கிறதை கண்டறிந்திருக்கிறேன். அவர்கள் மதிப்பிழந்தும், தகுதியற்றவர்களாகவும் உணர செய்ய பிசாசு மிகவும் கடினமாக உழைக்கிறானென்று நான் நினைக்கிறேன். ஆனால் அவனுடைய பொய்களையும், குற்றச்சாட்டுகளையும், அவர்களை கட்டியெழுப்புவதின் மூலமும், உற்சாகப்படுத்துவதின் மூலமும், பக்தி விருத்தியடையச் செய்வதின் மூலமும் செயலிழக்க செய்யலாம்.
இதை செய்யக்கூடிய ஒரு வழி உணமையான பாராட்டுகளைக் கொடுப்பதாகும். இவ்வுலகிலே மிகவும் விலையேறப்பெற்ற வெகுமதிகளில் இதுவும் ஒன்று. ஒரு உண்மையான பாராட்டைக் கொடுப்பது, சிறிய காரியமாக காணப்படலாம். ஆனால் பாதுகாப்பற்ற உணர்வுடனும், அவர்கள் அவ்வளவு முக்கியமில்லாதவர்கள் என்பதாக உணரும் மக்களுக்கு அது பிகப் பெரிய பலனை அளிக்கிறது.
நான் இலக்குகளைக் கொண்டிருப்பதை நம்புகிறேன். நான் பிறரை உற்சாகப்படுத்தும் நல்ல பழக்கங்களை வளர்க்க தேவனோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த போது, நான் ஒரு நாளில் குறைந்த பட்சம் மூன்று நபரையாவது பாராட்ட வேண்டுமென்று சவால் எடுத்தேன். இதைப் போன்று நீங்களும் தீவிர ஊக்கமளிப்பவராக மாறுங்கள்.
கைவிடப்பட்டவர்களை தேவன் தம்முடைய பிள்ளைகளாக தெரிந்து கொள்கிறாரென்று வேதம் சொல்லுகிறது. அத்தகையவர்களை நாம் கண்டு பிடித்து அவர்களைக் கட்ட, விலையேறப் பெற்றவர்களாக உணர வைக்க முயற்சிப்போமாக. தேவன் அவர்களை நேசிக்கிறாரென்று அவர்களை அறிந்து கொள்ள செய்வோமாக.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, தேவன் அவர்களை தம் சொந்த பிள்ளைகளாக நேசிக்கிறார் என்று அறியாதவர்களை எனக்குக் காட்டும். நான் அவர்களை உற்சாகப்படுத்தி, விலையேரப் பெற்றவர்களாக அவர்களை உணரச் செய்ய அவர்களுடைய பாதைகளிலே என்னை குறுக்கிட செய்யும்.