“நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.” – மாற்கு 11:25
ஒருவர் நம்மை காயப்படுத்தும் போது, அவர் நம்மிடமிருந்து எதையோ திருடிக்கொண்டு விட்டதைப் போன்று நாம் பிரதிக்கிரியை செய்கின்றோம். அவர்கள் நமக்கு கடன் பெற்று இருக்கின்றனர் என்பதைப் போன்று உணர்கிறோம். ஆயினும் நாம் அதை விட்டுவிட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
நான் மன்னிக்க மறுப்போம் என்றால், நமக்கு தேவையானதை பெற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கை நமக்கு எப்படி இருக்கும்? தேவன் தமது வார்த்தையில் நமக்கு வாக்களித்ததை, நாம் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் நாம் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும். அது எவ்வளவு கடினமாக இருப்பினும் நாம் அப்படி செய்ய வேண்டும். நாம் மன்னிக்க வேண்டும்.
மன்னிப்பை பற்றி சாத்தான் ஊடுருவ செய்திருக்கும் மிகப்பெரிய வஞ்சனை என்னவென்றால், நம் உணர்வுகள் மாறவில்லை என்றால், நாம் உண்மையாகவே மன்னிக்கவில்லை என்று. ஒருவரை நீங்கள் மன்னிக்க தீர்மானிக்கும்போது அதே மாதிரியான உணர்வுகள் இன்னும் இருப்பதால் நீங்கள் அவரை உண்மையாகவே மன்னிக்கவில்லை என்று பிசாசு உங்களிடம் சொல்வதை அனுமதிக்காதீர். மன்னிக்கும் படி சரியான தீர்மானம் எடுத்தும், வேறுமாதிரி உணராமல் இருக்கக்கூடும். அப்போதுதான் விசுவாசம் அங்கே நுழைகிறது. நீங்கள் உங்களுடைய பங்கை செய்துவிட்டீர்கள். இப்போது தேவனுக்காக காத்திருங்கள். அவர் தமது பங்கை செய்து உங்களுடைய உணர்ச்சிகளை சுகமாக்குவார். உங்களை முழுமையாக்குவார். உங்களை காயப்படுத்தியவர் மேல் இருக்கும் உங்கள் உணர்ச்சிகளை மாற்றுவார்.
ஜெபம்
தேவனே, என்னை காயப்படுத்தியவர்களை மன்னிக்க நான் தெரிந்து கொள்கிறேன். இயேசுவின் அவர்களின் கடனிலிருந்து கட்டவிழ்த்து விடுகிறேன். என்னுடைய இதயத்தை குணமாக்கி என்னை முழுமையாக்கும்.