
“எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.” – 2 கொரி 2:10-11
மன்னிப்பு நமக்கு உதவுகிறது. ஏனென்றால் அது தேவன் நம்மில் கிரியை செய்ய ஏதுவாக்குகின்றது. நான் மன்னிக்காத விஷத்தால் நிரப்பப்படாதபோது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், சரீரத்திலே நன்றாக உணர்கிறேன். ஒரு நபருக்கு ஏற்படும் கசப்பு, வெறுப்பு மற்றும் மன்னியாமை ஆகியவற்றின் மன அழுத்தத்தால் கொடிய நோய்கள் ஏற்படக்கூடும்.
மற்றவர்களை நாம் மன்னிக்காவிட்டால், பிதாவும் நம் பாவங்களை மன்னிக்க மாட்டார். நாம் விதைத்ததை அறுவடை செய்வோம் (மத்தேயு 6:14-15; கலாத்தியர் 6:7-8 ஐக் காண்க). இரக்கத்தை விதையுங்கள், கருணையை அறுவடை செய்வீர்கள்; நியாயத்தை விதையுங்கள், நீங்கள் நியாயத்தை அறுவடை செய்வீர்கள். உங்கள் வாழ்க்கையில், உங்கள் இருதயத்தின் கதவு திறக்கப்பட கடவுளின் கிருபையால் நீங்கள் மன்னிக்க வேண்டும்.
மன்னியாமை பிசாசுக்கு இடம் கொடுக்கிறது. கோட்டை கட்ட அவனுக்கு அந்த இடம் தேவைப்படுகிறது. அவனுக்கு ஒரு கோட்டை இருக்கும்போது, அவன் பரிசுத்த ஆவியின் கிரியையை தடுக்க முடியும். நீங்கள் மன்னிக்கும் போது, சத்துரு உங்களை மேற்கொள்ளாத படி செய்கின்றது. மேலும் கடவுளுடனான உங்கள் ஐக்கியம் தாராளமாக இருக்கும் படி செய்கின்றது.
தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய நீங்கள் தேர்வு செய்யும் போது பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் சத்துருவை நீங்கள் ஜெயிக்க முடியும். எனவே உங்களுக்கு நீங்களே ஒரு உதவியைச் செய்யுங்கள், விரைவாக மன்னிக்கவும்.
ஜெபம்
தேவனே, என் வாழ்க்கையில் சாத்தான் காலடி எடுத்து வைக்கவோ அல்லது கோட்டை கட்டவோ கொடுக்க நான் விரும்பவில்லை. உம்முடன் நான் ஐக்கியம் கொள்ள தடை செய்யும் எதையும் நான் விரும்பவில்லை. நான் மன்னிக்கத் தேர்வு செய்கிறேன், அதனால் நான் உம்முடன் ஐக்கியமாக இருக்க முடியும்.