
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” – 1 யோவான் 1:9
நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் நமக்கு மன்னிப்பு தேவை. பாவத்தை நாம் உணர்ந்து கொள்ள பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களிலே அபாய ஒலி எழுப்புகிறதோடு நாம் பாவத்திலிருந்து தொடர்ந்து சுத்திகரிக்கப்பட, இயேசுவின் இரத்தத்தின் வல்லமையை நமக்கு அளிக்கிறார். தேவனோடு நம்மை சரியான நிலையில் இருக்கும் படி செய்கிறார்.
ஆனால் நாம் ஆக்கினையினால் மேற்கொள்ளப்பட்டிருப்போம் என்றால், அது தேவனிடமிருந்து இல்லை என்பதில் உறுதியாக இருக்கலாம். அவர் இயேசுவை நமக்காக மரிக்கும் படியும், நம் பாவங்களுக்காக கிரயம் செலுத்தவும் அனுப்பினார். இயேசு நம் பாவத்தையும் ஆக்கினையையும் சிலுவையிலே சுமந்தார். (ஏசாயா 53).
பாவத்தின் நுகத்தினை நம் மேலிருந்து முறிக்கும்போது, குற்ற உணர்வையும் அகற்றி விடுகிறார். நம் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, எல்லா அநீதியினின்றும் நம்மை தொடர்ந்து சுத்திகரிக்க அவர் உண்மையுள்ளவராகவும், நீதி உள்ளவராகவும் இருக்கிறார்.
(1 யோவான் 1:9).
நாம் மன்னிப்பை பெற்றுக்கொண்டு அவரோடு நெருக்கமான ஐக்கியத்தை அனுபவிக்க, தேவனை ஜெபத்திலே அணுகுவதை, ஆக்கினையும், இலட்சையும் தடுத்துவிடும் என்பதை பிசாசு அறிந்திருக்கிறான்.
நம்மைப்பற்றி நாம் தவறாக உணர்ந்துகொண்டு அல்லது தேவன் நம்மேல் கோபமாய் இருக்கிறார் நம்பிக் கொண்டிருப்பது தான், அவரது பிரசன்னத்தில் இருந்து நம்மை பிரிக்கின்றது. அவர் உங்களை ஒரு போதும் கைவிடமாட்டார். எனவே ஆக்கினையின் நிமித்தம் அவரிடமிருந்து விலகி செல்லாதீர். அவரது மன்னிப்பை பெற்றுக்கொண்டு அவருடன் நடந்து சொல்லுங்கள்.
ஜெபம்
தேவனே, ஆக்கினை தீர்ப்பு உம்மிடமிருந்து வருவதில்லை என்று எனக்கு காண்பிப்பதற்காக உமக்கு நன்றி. இன்று நான் உம்முடைய மன்னிப்பை பெற்றுக்கொள்கிறேன். நீர் என்னை என்னுடைய பாவத்திலிருந்து சுத்தீகரித்திருக்கிறீர். எனவே உம்முடன் நான் சரியான நிலையில் இருக்க இயலுகிறது.