
“எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.- மாற்கு 11:23
நாம் மலையினிடம் பேச வேண்டும். அது பெயர்ந்து சமுத்திரத்திற்குள்ளே எறியப்படக் கட்டளையிட வேண்டும் என்று சொன்ன போது அவர் ஒரு புரட்சிகரமான கருத்தை கூறினார்.
கவனியுங்கள், நாம் பொதுவாக நம் வாழ்விலிருக்கும் மலைகள்’அல்லது சவால்களைப் பற்றி பேசுகிறோம். ஆனால் தேவனுடைய வார்த்தையானது அலைகளுடன் நாம் பேச வேண்டுமென அறிவுறுத்துகிறது. அப்படி நாம் செய்யும் போது தேவனுடைய வார்த்தையோடு நாம் இணைந்து பிரதிக்கிரியை செய்ய வேண்டும்.
லூக்கா 4 லிலே, வனாந்திரத்திலே சாத்தான் இயேசுவை சோதிக்க முயன்று கொண்டிருந்த போது, ஒவ்வொரு சோதனைக்கும் இயேசு தேவனுடைய வார்த்தையை பேசி பதிலளித்தார்.
சாத்தானுடைய வஞ்சனையையும், பொய்யையும் நேருக்கு நேர் எதிர்க்கும் வார்த்தைகளை மீண்டும் மீண்டுமாக சொன்னார்.
இதை கொஞ்ச காலத்திற்கு முயற்சி செய்கிறோம். ஆனால் துரிதமான பலனை நாம் பார்க்காத போது நம்முடைய பிரச்சினைகளிடம் தேவனுடைய வார்த்தையை பேசுவதை நிறுத்தி விட்டு மீண்டுமாக நம் உணர்ச்சிகளை பற்றி பேசத் தொடங்குகிறோம். வெற்றி பெற விடாப்பிடியாக இருப்பது முக்கியமானதாகும்.
எந்தவொரு பிரச்சினையையும், எதிர்மறையான சூழ்னிலையையும் மேற்கொள்ள, தேவ வார்த்தையை தொடர்ந்து பேசுவது வல்லமையானது, மிகவும் முக்கியமானதுமாகும். நீங்கள் எதை நம்புகிறீர்களென்பதை அறிந்து கொண்டு, இறுதி வரை அதையே பற்றிக் கொண்டிருக்க தீர்மாணமாயிருங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியே, என் வாழ்விலிருக்கும் மலைகளிடம் தேவனுடைய வார்த்தையை பேச எனக்கு நினைப்பூட்டுவீராக. ஒவ்வொரு முறையும் நான் குறை கூறவோ அல்லது நம்பிக்கை இழக்க நேரிடும் போதோ, உம்முடைய வார்த்தையை தைரியமாகவும், உறுதியான நம்பிக்கையுடனும், மலையை தகர்க்க என்னை ஏவியருளும்.