“நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு. – உபாகமம் 30:19
நான் ஒன்பது வயதில் புகை பிடிக்க கற்றுக்கொண்டேன். அது எனக்கு புத்துணர்வு அளித்ததால், மிகவும் பிடித்திருந்ததால் அதை விட்டுவிட மனம் இல்லாமல் இருந்தேன். அதை விட்டுவிட வேண்டும் என்று நான் அறிந்த போது, அதற்கு மனம் இல்லாமல் இருந்தேன். ஏனென்றால் நான் குண்டாகி விடுவேன் என்று எண்ணினேன். இந்த சாக்கு போக்கை தான் பல வருடங்களாக சொல்லிக்கொண்டிருந்தேன். பின்னர் அதை விடுவதும், மீண்டும் தொடங்குவதும் என்ற சுழற்சியில் சுழன்று கொண்டிருந்தேன்.
ஆனால் ஆலயத்திலிருந்து திருட்டுத்தனமாக வெளியே சென்று என் காரில் உட்கார்ந்து புகைக்க விரும்பும் ஒரு பிரச்சினைக்குரிய இடத்திற்கு வந்தேன் அப்போதுதான் நான் மாற வேண்டும் என்று அறிந்தேன்.
நம்மில் அநேகர் மாற விரும்புவதற்கு முன் பொதுவாக இத்தகையதொரு பிரச்சனைக்குரிய இடத்திற்கு வரவேண்டியிருக்கிறது. உதாரணமாக, சில சமயங்களில் சரியாக சாப்பிடுவதை தொடங்குவதற்கு ஒருவருக்கு மாரடைப்பு வரவேண்டியிருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் பிரச்சனைக்குரிய இடத்திற்கு வரவேண்டியதில்லை. ஆனால் தவிர்க்க இயலாது என்ற நிலையிலே நீங்கள் ‘ அவ்வளவுதான் இனிமேல் செய்யமாட்டேன்’ என்று சொல்லலாம்.
நாம் ஜீவனை தெரிந்து கொள்ளலாம் என்று வேதம் சொல்லுகிறது. தேவன் நீங்கள் மாறுவதற்கு தேவையான ஆதரவையும், திறனையும் கொடுத்திருக்கின்றார். ஆனால் நீங்கள் மனமுவந்து இருக்கவேண்டும். இல்லையேல் உங்கள் பிரச்சினைக்குரிய நிலை மிகவும் கடினமாக வந்துவிடும். அந்த நிலையை நீங்கள் அடையும் முன் ஜீவனை தெரிந்துகொள்வது மிகவும் எளிமையானது.
கொஞ்ச காலத்திற்கு சிறிது அசௌகரியமாக இருக்கும் பயப்படாதீர். இறுதியாக புகை பிடிப்பதில் இருந்து நான் வெற்றி பெற்றேன். அது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ஆனால் அதை நான் தனிமையாக செய்யவேண்டிய அவசியமில்லை.
நீங்கள் மாறுவதற்கு ஆயத்தமாக இல்லை என்று நினைத்தீர்கள் என்றால் அதை தேவனிடம் எடுத்துச்சென்று எனக்கு உதவும், எனக்கு உதவும், எனக்கு உதவும் என்று சொல்லுங்கள்.
நற்செய்தி என்னவென்றால் தேவனுடைய உதவியோடும், ஜீவனை தெரிந்துகொள்ள நீங்கள் தீர்மானிப்பதாலும், நிச்சயமாக நிரந்தரமாக மாறலாம்.
ஜெபம்
தேவனே, எனக்கு நீர் தெரிந்துகொள்ளுதலைக் கொடுத்திருக்கிறீர், நான் ஜீவனை தெரிந்து கொள்கிறேன்! மாற்றம் கடினமானது என்று அறிந்திருக்கிறேன். ஆனால் நீர் எனக்கு உதவும்படி கேட்கிறேன். உம்முடைய உதவியோடும், மாறவேண்டும் என்ற என் விருப்பத்தாலும், எந்த ஒரு தடையையும் என்னால் மேற்கொள்ள இயலும் என்று அறிந்திருக்கிறேன்.