“தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.” – லூக்கா 1:37
நேர்மறையான நோக்கத்தைக் கொண்டு இருப்பவர்கள் மிகவும் சோர்வடைய செய்யும் சூழ்நிலைகளிலும் சாத்தியக்கூறுகளை காண்பார்கள். ஆனால் எதிர்மறையாக சிந்திப்பவர்கள் பிரச்சினைகளையும், குறைவுகளையும் சுட்டிக் காட்டுவதில் துரிதமாக இருப்பார்கள்.
இது ஒரு ஜாடியை ‘பாதி நிரம்பியிருக்கிறது’ அல்லது பாதி குறைவாக இருக்கிறது என்று விவரிக்க உபயோகிக்கும் பதத்தையும் கடந்து, உண்மையாகவே தீர்மானங்களையும், செயல்களையும், எதிர்மறையான அல்லது நேர்மறையான எண்ணங்களை சார்ந்து எடுப்பது வரை செல்கின்றது.
எதிர்மறையான எண்ணங்கள் எப்படியாக காரியங்களை மிகைப்படுத்தி விடுகிறது என்பதை கவனித்திருக்கிறீர்களா? பிரச்சினைகள், இருப்பதை விட அதிக பெரியதாகவும், கடினமானதாகவும் காணப்பட தொடங்குகிறது.
சில சமயத்தில் ஒரு பிரச்சனையானது இயற்கை ரீதியாக பார்க்கையிலே முடியாததை போன்று காணப்படும். ஒரு எதிர்மறை மனப்பான்மை தேவனால் முடியாது எதுவும் இல்லை என்பதை மறந்து விடுகிறது.
தேவனுடைய வார்த்தையை தியானிப்பது எதிர்மறையில் இருந்து விடுபட்டு தேவன் யார் என்பதில் கவனம் செலுத்த உதவுகிறது தேவனுடைய வார்த்தையை சார்ந்திருக்கும் ஒரு நேர்மறையான மனம் தேவனால் முடியாதது எதுவுமில்லை என்பதை அறிந்து இருக்கிறது. அவர் எப்போதும் இருக்கிறார்.
நான் தேவனையும் அவரது வார்த்தையும் நம்ப என் மனதிற்கு பயிற்சி அளித்து இருக்கிறேன். என்னுடைய சூழ்நிலைகளுக்கு மேலாக நான் தேவனை நம்பிய பொழுது, எனக்கு கிடைக்கும் வல்லமையை, பெலனை நான் அனுபவித்திருக்கிறேன் தேவனால் இயலாதது எதுவுமே இல்லை என்பதை நாம் எப்போதுமே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஜெபம்
தேவனே ‘ஜாடி பாதி காலியாக இருக்கிறது’ மனப்பான்மையினால் நான் எதையும் ஏற்றுக்கொள்ள இயலாது என்பது எனக்கு தெளிவாக விளங்குகின்றது. முடியாது என்பது போன்று காணப்படும் சூழ்நிலையிலும் நீர் இருக்கிறீர், உன்னுடைய வார்த்தையை சார்ந்து வாழ்க்கையில் நேர்மறையான வற்றை பார்க்க தெரிந்து கொள்கிறேன்.