“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” – சங்கீதம் 119:105
தேவனுடனான நமது உறவில் நாம் அனைவரும் வளரவும், மேம்படுத்தபடவும் இடம் உண்டு என்பது உண்மையே. நான் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதைப் பற்றி சோர்ந்து போவதுண்டு. ஒவ்வொரு நாளும், சில நேரங்களில் ஒவ்வொரு மணி நேரமும் அது நினைவுறுத்தப்பட்டதாக எனக்கு தோன்றியது. நான் தொடர்ச்சியாக தோல்வியின் உணர்வை சுமந்து கொண்டிருந்தேன் – நான் யாராக இருக்க வேண்டுமோ அப்படி இல்லை, நான் போதுமான அளவு முயற்சி செய்யவில்லை. இன்னும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனாலும், நான் கடினமாக முயற்சித்தபோது, நான் மீண்டும் தோல்வியடைந்தேன்.
நான் இப்போது ஒரு புதிய மனப்பாண்மையைக் கொண்டிருக்கிறேன். நான் இருக்க வேண்டிய இடத்தில் நான் இல்லை, ஆனால் தேவனுக்கு நன்றி, நான் இருந்த இடத்தில் இப்போது இல்லை. நான் நன்றாக இருக்கிறேன், நான் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்! நான் இன்னும் சென்றடையவில்லை என்பதால் தேவன் என்மீது கோபப்படுவதில்லை என்பதை நான் இப்போது முழு மனதுடன் அறிந்திருக்கிறேன். அவர் எனக்காய் ஆயத்தம் பண்ணி வைத்துள்ள பாதையில் நான் முன்னேறி சென்று கொண்டிருக்கிறேன் என்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.
நீங்களும் நானும் “தொடர்ந்து கொண்டே இருப்போம்” என்றால், நம்முடைய முன்னேற்றத்தில் கடவுள் மகிழ்ச்சி அடைவார். நமக்கு முன் இருக்கும் பாதையை அவர் ஒளிரச் செய்வதாக உறுதியளித்துள்ளார். ஒருவேளை நமக்கு பாதை தெரியாமலிருக்கலாம், அவ்வப்போது நாம் தடுமாறலாம், ஆனால் தேவன் உண்மையுள்ளவர். அவர் உங்கள் முன்னேற்றத்தைக் காண்கிறார். அவர் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறார், சரியான பாதையில் செல்ல அவர் உங்களுக்கு உதவுவார்!
ஜெபம்
தேவனே, நான் இருக்கும் இடத்தைப் பற்றி சோர்வடைய மாட்டேன். நீர் ஏற்கனவே என்னை இதுவரை அழைத்து வந்திருக்கிறீர். மேலும் நீர் தொடர்ந்து என் வழியை வெளிச்சமாக்குவீர் என்று அறிந்திருக்கிறேன்.