அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். (எசேக்கியேல் 11:19)
இன்றைய வசனத்தில், கல் நெஞ்சத்திற்கு பதிலாக இரத்தமும் சதையுமான இருதயத்தை கடவுள் நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் ஒரு கடினமான இருதயம் கொண்ட நபரை ஒரு மென்மையான, உணர்திறன் கொண்ட நபராக மாற்ற முடியும்.
நாம் நம் வாழ்க்கையை கடவுளுக்குக் கொடுக்கும்போது, அவர் நம் மனசாட்சிக்குள் சரியான மற்றும் தவறான காரியங்களைக் குறித்த உணர்வை வைக்கிறார். ஆனால் நம் மனசாட்சிக்கு எதிராக நாம் பல முறை கலகம் செய்தால், கடின உள்ளம் கொண்டவர்களாக மாறலாம். அப்படி நடந்தால், பரிசுத்த ஆவியின் தலைமைக்கு, நாம் ஆவிக்குறிய ரீதியில் உணர்திறன் உடையவர்களாக இருக்க, கடவுள் நம் இருதயங்களை மென்மையாக்க அவரை அனுமதிக்க வேண்டும்.
நான் கடவுளுடன் உண்மையில் தொடர்பு கொள்ளத் தொடங்குவதற்கு முன்பு, நான் மிகவும் கடின மனதுடன் இருந்தேன். அவரது முன்னிலையில் தொடர்ந்து இருப்பது என் இருதயத்தை மென்மையாக்கியது. மேலும் அது என்னை அவரது சத்தத்திற்கு உணர்திறன் கொண்டவளாக மாற்றியது. கடவுளின் தொடுதலை உணரும் இருதயம் இல்லாமல், அவர் நம்மிடம் பேசும் நேரங்களை நம்மால் அடையாளம் காண முடியாது. அவர் ஒரு விஷயத்தைப் பற்றி மெதுவாக, சிறிய அல்லது மென்மையான குரலில் நம்பிக்கையுடன் பேசுவார்.
கடின இருதயமுள்ள ஒரு நபர் மற்றவர்களை காயப்படுத்தும் ஆபத்தில் இருக்கிறார், மேலும் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்பதை அறியாமலும் இருக்கிறார், மேலும் இது கடவுளின் இருதயத்தை துக்கப்படுத்துகிறது. கடின இருதயமும், “தங்கள் காரியங்களைச் செய்வதிலேயே” மும்முரமாக இருப்பவர்கள் கடவுளுடைய சித்தத்தையோ, சத்தத்தையோ உணரமாட்டார்கள். கடவுள் தம் வார்த்தையால் நம் இருதயங்களை மென்மையாக்க விரும்புகிறார், ஏனென்றால் கடினப்பட்ட இருதயத்தால் அவருடைய சத்தத்தக் கேட்கவோ அல்லது அவர் கொடுக்க விரும்பும் பல ஆசீர்வாதங்களைப் பெறவோ முடியாது.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்கள் இருதயத்தை மென்மையாகவும், கடவுளின் சத்தத்திற்கு உணர்திறன் கொண்டதாகவும் வைத்திருங்கள்.