“ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும்.” – உபாகமம் 1:6
11 நாள் பிரயானப்பட வேண்டியிருந்ததை, இஸ்ரவேலர் வனாந்திரத்தில் நாற்பதுநாள் அலைந்து திரிந்து மேற்கொண்டனர். ஏன்?
ஒரு முறை நான் இந்த சூழ்நிலையைப் பற்றி ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தபோது, தேவன் என்னிடம் இஸ்ரவேலர் முன்னேறி செல்ல இயலவில்லை, ஏனென்றால் அவர்கள் ஒரு வனாந்திர மனப்பான்மையை கொண்டிருந்தனர் என்றார். இஸ்ரவேலுக்கு தங்கள் வாழ்க்கைக்கென்று ஒரு நேர்மறையான தரிசனம் இருக்கவில்லை – கனவு / தரிசனம் இருக்கவில்லை. அவர்கள் அந்த மனப்பான்மையை விட்டு விட்டு தேவனை நம்ப வேண்டியிருந்தது.
நாம் இஸ்ரவேலரை ஆச்சரியத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நம்மில் அநேகர் அவர்கள் செய்ததை போன்று தான் நாமும் செய்கின்றோம். நாம் முன்னோக்கி செல்வதற்கு பதிலாக அதே மலையை சுற்றி சுற்றி வருகிறோம். சீக்கிரத்தில் வெற்றியோடு செய்து முடித்திருக்க வேண்டிய காரியத்தை, செய்து முடிக்க பல ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
நமக்கு ஒரு புதிய மனநிலை அவசியம். தேவனுடைய வார்த்தை உண்மையானது என்பதை நம்ப தொடங்க வேண்டும். மத் 19:26-ல் தேவனாலே எல்லாம் கூடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவருக்கு தேவைப்படுவதெல்லாம் அவர் பேரில் விசுவாசம் தான். நான் நம்ப வேண்டும், மீதியை அவர் செய்வார்.
இஸ்ரவேல் மக்களிடம் சொன்ன அதே காரியத்தை தான் உங்களிடமும், என்னிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறார். நீங்கள் இந்த மலையிலே அதிக காலம் தரித்திருந்து விட்டீர்கள். நாம் முன்னோக்கி செல்ல வேண்டிய நேரம் இது.
ஜெபம்
தேவனே, அதே பழைய மலையை சுற்றி வந்தது போதும். ஆண்டவரே உம்மோடு நான் முன் நோக்கி செல்லலாம் என்று அறிந்திருக்கிறேன். எனவே நான் என்னுடைய விசுவாசத்தை உம் மீது வைத்து வனாந்தர மனப்பான்மையை விட்டு விடுகிறேன்!