“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” – 2 கொரி 5:17
தவறான தேர்வுகள் வருத்தங்களை ஏற்படுத்தும். நாம் வருத்தப்படும் போது, அதனால் எதிர்காலத்திலே நாம் எப்படி நல்ல தேர்வுகளை செய்யலாம் என்று அவை நமக்கு கற்றுக் கொடுக்க அனுமதிக்க வேண்டும்.
தவறான தேர்வுகள், வருத்தங்களுக்குள்ளாக நடத்தும் என்பதை முதலில் புரிந்து கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன் எனக்கும் டேவுக்கும் இடையில் இருக்கும் பல வேற்றுமைகள் புரிந்தது. ஏனென்றால் அவர் தம் வாழ் நாள் முழுவதும் உடற் பயிற்சி செய்திருக்கிறார். அதனால் அவர் ஆரோக்கியத்தோடும், பெலனோடும், நல்ல உடற் கட்டோடும் இருக்கிறார்.
ஆரம்பத்தில் நான் டேவைப் போன்று அவ்வளவு பெலமுள்ளவளாக இல்லையே என்று வெறுமனே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். பின்னர் அதைக் குறித்து ஏதோவொன்றை செய்யலாமே என்று உணர்ந்தேன். இப்போது நான் முறையாக உடற்பயிற்சி செய்கிறேன். அதனால் ஏற்படும் நேர்மறையான காரியங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்.
வேதம் சொல்கிறது, தேவனால் நீங்கள் புதிய சிருஷ்டியாக இருக்கிறீர்கள். உங்களுடைய பழைய வழியிலே நீங்கள் வாழ வேண்டிய அவசியம் இல்லை. இப்போதே பரிசுத்த ஆவியானவரால் பெலப்படுத்தப்பட்டு புதிய நல்ல தேர்வுகளை செய்யலாம். கடந்த காலத்திலே நீங்கள் செய்த சில ஞானமற்ற தேர்வுகளைக் குறித்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்களென்றால், இனி அதைப் பற்றி ஏதாவது செய்ய காலம் கடந்து விட்டது என்று நினைத்து சோர்ந்து போகாதீர். எது சரியோ அதை செய்யத் தொடங்கி தொடர்ந்து செய்யுங்கள்.
சிறந்த தேர்வுகளை நீங்கள் செய்யத் தொடங்கும் போது, அனுதினமும் தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, நான் புதிய சிருஷ்டியாக்கப்பட்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். கடந்த காலத்தைப் பற்றிய வருத்தத்திலே வாழ விரும்பேன். நீர் எனக்காக வைத்திருக்கும் நல்ல எதிர்காலத்தை அனுபவிக்க, நல்ல தேர்வுகளை செய்ய எனக்கு உதவுவீராக