கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன். (எரேமியா 10:23)
எரேமியா, இன்றைய வசனத்தில் உண்மையைப் பேசியிருக்கிறார். மனிதர்களாகிய நம்மால், நம் சொந்த வாழ்க்கையை சரியாக நடத்துவது உண்மையில் சாத்தியமற்றது. உங்களுக்கும் எனக்கும் உதவி தேவை, அது நிறைய தேவை. அதை ஒப்புக்கொள்வது ஆவிகுறிய முதிர்ச்சியின் அடையாளம், பலவீனத்தின் அடையாளம் அல்ல. நம் பெலத்தை கடவுளிடம் காணாத வரையில் நாம் பலவீனமாக இருக்கிறோம். அந்த உண்மையை எவ்வளவு விரைவில் தெரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு சிறப்பாக இருப்போம்.
நீங்கள் ஒரு காலத்தில், நான் இருந்ததைப் போல் இருக்கலாம்-காரியங்களைச் சரியாகச் செய்ய கடினமாக முயற்சி செய்து, எப்போதும் தோல்வியடைந்திருக்கலாம். உங்கள் பிரச்சனை, நீங்கள் தோல்வியுற்றவர் என்பதல்ல; உங்கள் பிரச்சனை என்னவென்றால், நீங்கள் உதவிக்கு சரியான நபரிடம் செல்லவில்லை.
தேவன் இல்லாமல் வெற்றி பெற உண்மையிலேயே அவர் அனுமதிக்க மாட்டார். உண்மையான வெற்றி என்பது பொருள், செல்வத்தைக் குவிக்கும் திறன் மட்டுமல்ல; அது உண்மையிலேயே வாழ்க்கையை மற்றும் அதில் தேவன் வழங்கும் அனைத்தையும் அனுபவிக்கும் திறன். பலருக்கு பதவி, நிதி, அதிகாரம், புகழ் மற்றும் பிற ஒத்த விஷயங்கள் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு உண்மையில் முக்கியமானவைகள் இருக்காது – நல்ல உறவுகள், கடவுளுடனான சரியான நிலைப்பாடு, சமாதானம், மகிழ்ச்சி, மனநிறைவு, திருப்தி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கும் திறன்.
சங்கீதம் 127:1-ன்படி, கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. நம்மால் கட்ட முடியும், ஆனால் தேவன் அதில் ஈடுபடவில்லை என்றால் நாம் கட்டுவது நிலைக்காது. அவர் நம் வாழ்க்கையின் பங்குதாரர், மேலும் நாம் செய்யும் எல்லாவற்றிலும், அவர் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார். தேவன் நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆர்வமாக இருக்கிறார், மேலும் நம்மைப் பற்றிய எல்லாவற்றையும் குறித்து நம்மிடம் பேச விரும்புகிறார். இந்த உண்மையை நம்புவது அவருடனான ஒரு அற்புதமான பயணத்தின் தொடக்கமாகும்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் உங்கள் வாழ்க்கையில் துணையாக இருக்கட்டும்.