“கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.” – 2 கொரி 3:17
அன்பு விடுதலையாக்குகின்றது. அது சொந்தமாயிருக்கும் உணர்வையும், விடுதலையின் உணர்வையும் கொடுக்கிறது. அன்பு பிறரை அடக்கவோ தந்திரமாக கையாளவோ முயலாது. பிறருடைய முடிவைப் பார்த்து நிறைவை உணராது.
இயேசு, தாம் தேவனால் விடுதலையை அறிவிக்கவே அனுப்பட்டாரென்று சொன்னார். விசுவாசிகளாக நாமும் அப்படித்தான் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். மக்களை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமல் அவர்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும் சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
நான் மக்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறேனோ அது போன்று அவர்கள் செய்ய வேண்டுமென்று முயற்சிப்பது, அவர்கள் இருதயத்திலே தேவன் பேசுவதை தடுத்து நிறுத்தி விடுகின்றது என்பதைக் கண்டறிந்திருக்கிறேன். நம் வாழ்விலே இருப்பவர்களை நமக்காக அல்ல, தேவனுடைய மகிமைக்காக அவர்கள் எப்படியெல்லாம் இருக்கக் கூடுமோ அப்படியெல்லாம் இருக்கும் படி அவர்களை கட்டவிழ்த்து விட வேண்டும்.
மக்களை விடுதலையாக்கி விடுங்கள், அவர்கள் அதற்காக உங்களை நேசிப்பார்கள். காரியங்களை கட்டுப்படுத்தி கையாளுகிறவர்களாக இராதீர். மாறாக அவர்களின் வாழ்க்கையிலே தேவனே கட்டுப்பாட்டிலிருக்க அனுமதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
மக்களையும், காரியங்களையும் கட்டவிழ்த்து விடக் கூடியவனே மிகப்பெரிய அன்பைக் கொண்டிருப்பவனாகி விடுகிறான். இன்று கட்டுப்படுத்துபவராக இராமல் தேவனிடமிருந்து மட்டுமே வரக்கூடிய விடுவிக்கும் அன்பை தாராளமாக கொடுக்கக் கூடியவராக இருப்பீர்களாக.
ஜெபம்
தேவனே, பிறருக்கு நான் கொடுக்கும் அன்பானது நீர் எனக்கு கொடுக்கும் அதே விடுதலையாக்கும் அன்பாக இருக்க விரும்புகிறேன். கட்டுப்படுத்தி கையாள விரும்பும் என் விருப்பத்தை நான் விட்டு விடுகிறேன். என் வாழ்க்கையிலே நீர் கொடுத்திருப்பவர்களை நேசித்து உம்மிடம் அவர்களை ஒப்படைக்கிறேன்.