
ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 16:9)
சில சமயங்களில் கடவுளுடைய சித்தத்தைக் கண்டறிவதற்கான ஒரே வழி, “வெளியேறி கண்டுபிடிப்பது” தான். நான் ஒரு சூழ்நிலையைப் பற்றி ஜெபித்திருந்தாலும், தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்றால், நான் விசுவாசத்தின் ஒரு படி எடுத்து வைக்கிறேன். அவரை நம்புவது ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தானியங்கி கதவுக்கு முன் நிற்பது போன்றது என்று, கடவுள் எனக்குக் காட்டியுள்ளார். நாம் நாள் முழுவதும் நின்று கதவைப் பார்க்க முடியும். ஆனால் நாம் ஒரு படி மேலே எடுத்து வைத்து அதைத் திறக்கும் வரை அது திறக்காது.
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு படி மேலே செல்ல வேண்டும். சில கதவுகள் நாம் விசுவாசத்தில் அடி எடுத்து வைத்தவுடன் திறக்கும். மற்றவை நாம் என்ன செய்தாலும் திறக்கவே இல்லை. கடவுள் கதவைத் திறந்ததும், அதன் வழியாகச் செல்லுங்கள். அவர் கதவைத் திறக்கவில்லை என்றால், வேறு திசையில் செல்வதில் திருப்தி அடையுங்கள். ஆனால் பயம், உங்களை முழு செயலற்ற நிலையில் சிக்க வைக்க அனுமதிக்க வேண்டாம்.
இன்றைய வசனத்தில், பவுல் தனக்கு முன்பிருந்த வாய்ப்பின் வாசலைக் குறித்து குறிப்பிடுகிறார், ஆனால் அவர் “பல எதிர்ப்புகளையும்” பற்றி குறிப்பிடுகிறார். எனவே எதிர்ப்பை, மூடிய கதவு என்று தவறாக நினைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
பவுலும் அவரது சக ஊழியர்களான சீலாவும், பர்னபாவும் கடவுளுடைய சித்தத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு தேவதூதன் தோன்றுவதற்கோ அல்லது வானத்திலிருந்து ஒரு தரிசனம் வருவதற்கோ உட்கார்ந்து காத்திருக்கவில்லை. தாங்கள் சரியென்று உணர்ந்த திசையில் அடியெடுத்து வைத்தனர். பலமுறை கடவுள் அவர்களுக்காக கதவுகளைத் திறந்தார், ஆனால் அவர் கதவுகளை மூடிய நேரங்களும் உண்டு. இது அவர்களை ஊக்கப்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் வெறுமனே விசுவாசத்தில் முன்னேறி, கடவுள் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் உங்களுக்காக திறக்கும் கதவுகளின் வழியாக தைரியமாக நடந்து செல்லுங்கள், அவர் ஒன்றை மூடும் போது, சோர்வடைய வேண்டாம்.