“தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறது போல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.” – பிரசங்கி 5:3
பலனளிக்காத காரியங்களை செய்து கொண்டிருக்கிறீர்களா? மும்முரமாயிருத்தல் உங்கள் சமாதானத்தை திருடுகிறதா?
நான் ஒருமுறை இங்கிலாந்திலுள்ள பக்கிங்காம் அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதியிலே காவல் பணி செய்து கொண்டிருந்த ஒரு காவலாளியைப் பற்றி கேள்விப்பட்டேன். நூறு ஆண்டுகளாக 24 மணி நேரமும் அது பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஒரு நாள் ஒருவர் என்னத்தை பாதுகாக்கின்றாய் என்று கேட்டார். அவனுக்கு அதைப் பற்றி தெரியவில்லை. அது நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்படுகிறது என்று மட்டும் சொன்னார். நூறு ஆண்டுகளுக்கு முன் ராணி அவர்கள் சில ரோஜா செடிகளைப் பயிரிட்டு அவை வளர வேண்டுமென்று விரும்பினார். ஒரு நூறாண்டுக்குப் பிறகும், ஒரு காலத்தில் இருந்த ரோஜா செடியைப் பாதுகாத்துக் கொண்டிருந்தவனாக நின்று கொண்டிருந்தான் என்பது தெரிய வந்தது.
ஏன் செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே இன்னும் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் இருக்கின்றனவா? தேவன் ஒருபோதும் நம்மை மும்முரமாக இருக்க அழைக்கவில்லை, அவர் நம்மை பலனுள்ளவர்களாக இருக்கவே அழைத்தார். அர்த்தமில்லாத அனேக செயல்கள் பலனளிக்கிறதில்லை. அவை நம்மை மன அழுத்தத்திற்குள் ஆழ்த்துகிறது.
நாள் முழுவதும் நீங்கள் என்ன செய்கிறீர்களென்று ஒரு பட்டியலை தயாரித்து கவனிக்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன். தேவன் உங்களை செய்ய சொன்னவற்றை செய்து கொண்டிருக்கலாம் அல்லது ஒரு காலத்திலே உங்களை செய்யும் படி சொன்னார் ஆனால் அதை விடுத்து வேறு ஒன்றை செய்து கொண்டிருக்கலாம். எப்படியாயினும், எப்படி வேலை மும்முரத்தை விட்டு விட்டு அதிக பலன் கொடுப்பதை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு காட்டுவாராக.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, என் வாழ்விலே நான் செய்து கொண்டிருக்கும் காரியங்களைப் பற்றிய பட்டியலை எடுத்து அர்த்தமற்ற செயல்களை விட்டு விட எனக்கு உதவுவீராக. நான் அதிக வேலை மும்முரமாக இருக்க விரும்பவில்லை. எப்படி அதிக பலனுள்ள வாழ்க்கை வாழ்வது என்பதைக் காட்டுவீராக.