ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம். – கலா 6:10
கிறிஸ்தவர்களாக நாம் பெற்றிருக்கும் மிகப்பெரிய தருணங்களில் ஒன்று பிறருடைய வாழ்க்கையிலே ஆழமான வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருப்பதே என்று நம்புகிறேன். என் ஊழியத்தின் ஜீவிய முழுவதிலும் வழிநடத்துதல் தேவைப்பட்ட அநேகருக்கு அவருடைய வார்த்தையில் இருந்து போதனைகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார்.
ஆனால் எனக்கென்று மட்டுமே தேவன் கொடுத்து இருக்கும் ஒரு விசேஷமான வாய்ப்பு இது என்று நான் நம்புகிறதில்லை. ஒவ்வொருவரும், நீங்கள் உட்பட, பிறரில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறனைப் பெற்று இருக்கிறோம். பிறருக்கு உதவவும், அவர்களது வாழ்க்கையிலே முதலீடு செய்யவும் நேரம் ஒதுக்கும் போது, அவர்களுடைய உலகத்திலே தாக்கம் ஏற்படுத்துகிறீர்கள்
கலாத்தியர் 6:16 ல் தேவன் நம் பாதையிலே கொண்டு வருபவர்களுக்கு எல்லாம் ஆசீர்வாதமாக இருக்கும் படி கவனமாய் இருங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. நாம் ஆசீர்வாதமாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். பிறருடைய விசுவாசத்தை கட்டவும், அன்பின் சத்தியத்தை பயப்படாமல் பேசவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
தேவன், நாம் வாழ்க்கையிலே வேடிக்கை பார்ப்பவர்களாய் இராமல் மேலானவர்களாக இருக்க விரும்புகிறார் என்று நம்புகிறேன். நாம் பிறரின் வாழ்க்கையிலே ஊற்றப்படுவதற்கும் விருப்பமுள்ளவர்களாக இருக்கும் அளவுக்கு அவர்களை உண்மையாக நேசிக்கவும், அவர்கள்மேல் அக்கறையாக இருக்கும் மக்களாகவும் இருக்க விரும்புகிறார். நாம் பிறரை இயேசுவின் நாமத்திலே கட்டியெழுப்ப வேண்டும். அதனால் அவர்களும் வளர்ந்து இன்னும் அதிகமானவர்களை இயேசுவுக்குள்ளாக நடத்துவர்.
நீங்கள் அறிந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் யாரோ ஒருவர் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் வாழும் முறையினால் மக்கள் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். உங்களது அனுதின நடவடிக்கையில், அவர்கள் தேவனுடைய அன்பை காண வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
அவ்வப்போது நாம் தவறுகள் செய்கின்றோம். அப்படி செய்யும் போது அவருடைய மன்னிப்புக்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்தலாம். ஆனாலும் அனேக சமயங்களில் சிலர், தேவனை பார்க்கக்கூடிய ஒரு தடயம் நாமாகத் தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஜெபம்
தேவனே, ஒவ்வொரு நாளும், ஒருவருக்கு உதவவும், ஆசீர்வாதமாக இருக்கவும், அன்பின் தாக்கத்தை அவர்கள் மீது ஏற்படுத்தவும் நீர் மீண்டும் ஒரு வாய்ப்பை தருகிறீர். தேவன் மீது கவனம் வைத்து வாழ்வது என்றால் என்ன என்பதை காண்பிக்கதக்க, ஆசீர்வாதமான வாழ்வை வாழ விரும்புகிறேன்