
“உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்.” – ஏசாயா 61:7
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா?
ஆதியாகமம் 2:25 சொல்லுகிறது, ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் நிர்வாணமாக இருந்த போதிலும் வெட்கப்படாதிருந்தனர். அவர்கள் ஆடைகளின்றி இருந்தனர் என்பதோடு அவர்கள் ஒருவரோடொருவர் முற்றிலுமாக வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருந்தனர் என்பதை இந்த வசனம் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது. எவ்வித முகமூடிக்கு பின்னால் ஒளிந்து விளையாடிக் கொண்டிராமலிருந்தனர். அவர்கள் அவர்களாக இருக்கும் சுதந்திரத்தை பெற்று இருந்தனர். ஏனென்றால் அவர்களுக்கு எல்லாவிதமான இலட்சை உணர்வும் இல்லாமல் இருந்தது. அவர்கள் பாவம் செய்தபோது தங்களை மறைத்துக் கொண்டனர் (ஆதி 3:6-8).
சிலுவையில் இயேசு செய்தது மட்டும் இல்லாமல் இருந்தால், நாம் அனைவருமே நம்மை மேற்கொள்ளும் இந்த பாவத்தின் இலட்சையினால் வாழ வேண்டி இருந்திருக்கும். ஆனால் அவருடைய தியாகத்தினால் மனுக்குலத்திற்கு தேவனோடும், மற்றவர்களுடனும் பரிபூரணமான விடுதலையை அனுபவிக்கும் சிலாக்கியம் கிடைத்திருக்கிறது.
துரதிஷ்டவசமாக நம்மில் அநேகர் இன்னும் இலட்சையின் பாரத்தினால் வாழ்கின்றோம். (அதிலிருந்து நாம் விடுதலையை பெற்றுக் கொள்ளலாம் என்று தேவனுடைய வார்த்தை நமக்கு வாக்களித்தும், உறுதி அளித்தும் இருந்தாலும் (ஏசாயா 61:7).
இலட்சையினின்று தேவனால் உங்களை விடுதலையாக்க இயலும். உங்களுக்குள்ளே வளர முயலும் இலட்சையினின்று தேவன் உங்களை விடுதலையாக்கும்படி அவரிடம் கேளுங்கள், ஜெபியுங்கள்.
ஜெபம்
தேவனே, எனக்காக சிலுவையிலே நீர் சம்பாதித்த இலட்சையினின்று ஏற்படும் விடுதலையை நான் பெற்றுக்கொள்கிறேன். இனியும் ஒளிவு மறைவு இல்லை, தகுதியற்ற உணர்வு இல்லை. நீர் என்னுடைய பாவத்தை அகற்றி விட்டீர். இப்போது நான் உமக்கு முன்பாக விடுதலையோடும் வெளிப்படையாகவும் வாழ விரும்புகிறேன்.