கடவுளின் பிள்ளைகள்

கடவுளின் பிள்ளைகள்

நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? (எபிரெயர் 12:7)

நாம் தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்பட வேண்டுமென்றால், நாம் வளர்ந்து முதிர்ச்சியடைந்த தேவனுடைய குமாரர்களாகவும், குமாரத்திகளாகவும் ஆக மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நமது மாம்ச ஆசைகள், நமது இயற்கையான பசி, பிசாசு, நண்பர்கள், நம் உணர்ச்சிகள் அல்லது நாம் நினைப்பதே நம்மை வழிநடத்துவது ஆகியவற்றை அனுமதிக்கக் கூடாது; தலைமை மற்றும் வழிநடத்துதலுக்காக நாம் கடவுளின் ஆவியை மட்டுமே நோக்கிப் பார்க்க வேண்டும்.

கடவுளுடைய வார்த்தையை நாம் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக, அவர் நம்மைத் தவறாக வழிநடத்த மாட்டார் அல்லது நமக்கு நல்லதல்லாத எதற்கும் நம்மை வழிநடத்த மாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் அசௌகரியமாகத் தோன்றும் விஷயங்கள் கூட, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நாம் வெறுமனே பின்பற்றினால், இறுதியில் நம் வாழ்வில் பெரும் ஆசீர்வாதங்களாக மாறும். அவரைப் பின்பற்றக் கற்றுக்கொள்வது ஆவிக்குறிய முதிர்ச்சியின் ஒரு பகுதியாகும்.

வேதம் சில சமயங்களில் நம்மை “தேவனுடைய பிள்ளைகள்” என்றும் சில சமயங்களில் “தேவனுடைய குமாரர்கள்” என்றும் குறிப்பிடுகிறது. குழந்தைகளுக்கும், முதிர்ந்த மகன், மகள்களுக்கும் வித்தியாசம் உள்ளது. அனைவரும் சமமாக நேசிக்கப்பட்டாலும், முதிர்ந்த மகனும் மகளும் சுதந்திரம், சலுகைகள் மற்றும் பொறுப்புகளை அனுபவிக்கிறார்கள், குழந்தைகள் இன்னும் அந்த வயதை எட்டவில்லை.

நாம் குழந்தைகளாக கடவுளுடைய ராஜ்யத்திற்குள் வருகிறோம்; பின்னர் குழந்தைகளாக இருக்கும் காலத்தை கடந்து செல்கிறோம்; கடவுளின் குமாரனாகவும், குமாரத்திகளாகவும் கிறிஸ்துவுடைய வாரிசுகளாகவும் எப்படி நடந்துகொள்வது என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். கடவுள் நமக்கு அற்புதமான காரியங்களைச் செய்ய விரும்புகிறார், ஆனால் அவற்றைப் பெறுவதற்கு நாம் அவரில் வளர வேண்டும். ஆவிக்குறிய முதிர்ச்சியைத் தொடர உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இந்தச் செயல்பாட்டில் உங்களுக்கு உதவுமாறு அவரிடம் கேட்க இன்றே தொடங்குங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளில் முதிர்ச்சி அடைய தயாராக இருங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon