மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். – நீதி 17:22
ஒரு வேடிக்கையான கதையை கேட்க விரும்புகின்றீர்களா?
என்னிடம் அத்தகைய நிறைய கதைகள் உண்டு. அவையெல்லாம் அனுதினமும் சாதாரணமாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஆகும். அவையெல்லாம் எனக்கு ஏற்பட்ட போது நான் சிரித்து
கொண்டாடவில்லை. ஆனால் இப்போது அவற்றைப் பற்றி என்னால் சிரிக்க இயலுகிறது என்பதில் சந்தோஷம் அடைகிறேன்.
உதாரணமாக, என் தலைமுடி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வைக்க என்னால் இயலாத போது நகைக்கவில்லை! ஆனால் அதைப்பற்றி நான் என்ன செய்தேன் என்பதை நீங்கள் அறிந்தால் நகைப்பீர்கள். நான் துணிகளை தைக்க முயன்ற போது வேடிக்கையாக இருக்கவில்லை. விசேஷமாக அதை போட்டுக்கொள்ள நேர்ந்தவர்கள் அப்படியாக உணரவில்லை. மளிகை பொருட்களை வாங்கும் கடையிலே என் கணவர் டேவ் என் மீது காகிதத் துண்டுகளை தூக்கி எறிந்த போது நான் மிகவும் எரிச்சலுள்ளவளானேன். ஆனால் இப்போதோ என்ன செய்தாலும் என்னுடன் கொஞ்சம் விளையாட்டுத்தனமாக இருக்கவே அவர் அப்படியாக செய்தார் என்று அறிந்திருக்கிறேன். இத்தகைய சமயங்களை பார்த்து அதில் இருக்கும் நகைச்சுவையை காண நான் கற்றுக்கொண்டதற்காக சந்தோஷப்படுகிறேன்.
இப்போது, வாழ்க்கையிலே நடைபெறும் அனைத்தும் சந்தோசமாக அனுபவிக்கத் தக்கதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அறிந்திருக்கிறேன். ஆனால் நாம் அனைவருமே நம் வாழ்க்கையிலே அதிகமான நகைச்சுவைகளை கொண்டிருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அவற்றைப் பற்றி ஒவ்வொரு நாளும் நினைக்க நீங்கள் நேரம் எடுத்துக் கொண்டால், உங்களுக்கு சந்தோசத்தை கொண்டு வந்த ஒரு ஷனப்பொழுதை நீங்கள் கண்டுபிடிக்கலாம் அல்லது அத்தகைய தருணங்கள் உங்களுக்கு இப்போது நகைப்பை கொடுக்கலாம்.
தேவன், தம் பிள்ளைகள் சில வேடிக்கைகளை கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். வேதம் சொல்வது, ஒரு சந்தோஷமான இருதயம் அருமருந்தாகும். நாம் அனைவருமே அனுதினமும், அனேகந்தரம் நகைப்பென்னும் அருமருந்தை உட்கொள்ள வேண்டும். சந்தோசம் என்னும் மருந்தை அதிகம் உட்கொண்டபின் அதிக அளவில் உட்கொண்டாமோ என்று பயப்படத் தேவையில்லை!.
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை பார்த்து சிரிக்க வேண்டுமென்பதற்காக உங்களை உற்சாகப் படுத்துகிறேன்…. பிறருடன் நகைப்பை பகிர்ந்துகொண்டு அவர்களது நாளையும் பிரகாசம் ஆக்குங்கள்!
ஜெபம்
தேவனே, களிப்புள்ள இருதயம் நல்லதொரு மருந்தை போன்று இருக்கிறது என்று உம் வார்த்தை சொல்லுகிறது. என் வாழ்க்கையிலே சந்தோஷத்தையும் நகைப்பையும் கண்டுபிடிக்க உதவுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்!