
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.” – சங்கீதம் 37:4
மனிதர்களாக நாம் சந்தோஷமாக இருக்கவும், நம்மைப் பற்றி நன்றாக உணரவும் தேவன் நம்மை சிருஷ்டித்து இருக்கிறார். உண்மை என்னவெனில், நாம் நம்மைப் பற்றி நன்றாக உணர வேண்டும். இல்லையெனில் நாளடைவில் நாம் வாஞ்சிக்கும் நல்ல உணர்வை பெற்றுக்கொள்ள ஒருவிதமான ஆரோக்கியமற்ற, கட்டுக்கடங்காத நடத்தையை பெற்றுக்கொள்வோம்.
இப்படியாக யோசித்துப்பாருங்கள். போதை பொருளுக்கு அடிமையாகி இருக்கும் ஒருவர், அவர் மிகவும் அதிகம் என்று உணர்ந்த வலியை தற்காலிகமாக போக்க வேண்டும் என்பதற்காகவே உபயோகிக்க தொடங்கியிருக்கலாம். இதே போன்று தான் குடிப்பழக்கமும், ஆறுதலுக்காக உணவை நாடுவதும். நாம், நம் உள்ளிலிருந்து நல்ல உணர்வை பெற்றுக் கொள்ளாத போது அதை வெளிப்பிரகாரமான வழிமுறைகளால் பெற்றுக் கொள்ள முயலுகிறோம்.
தேவன் நம்மை அவ்விதமாகத்தான் உருவாக்கி இருக்கிறார் என்றால் அவர் மட்டும் தான் நம்மை திருப்தி படுத்த இயலும். நாம் நம்மைப் பற்றி நன்றாக உணர, அவரைத் தவிர வேறொன்றை நாடும்போது, நாம் உண்மையானதை ஏதோ மலிவான ஒன்றிற்க்காக மாற்றிக் கொள்கிறோம்.
இன்று உங்களுடைய உணர்ச்சிப்பூர்வமான தேவைகள் எதுவாக இருப்பினும், தேவன் மட்டுமே அதை நிறைவேற்ற இயலும் என்பதை அறியுங்கள். அவரே, ஒரே நிலையான ஊற்று. இன்றே அவரிடம் செல்லுங்கள். உங்களை திருப்தி படுத்த கூடியவர் அவர் மட்டுமே.
ஜெபம்
தேவனே, மலிவான மாற்றுப் பொருளை தேடிக் கொண்டு என் நேரத்தை விரயமாக்க நான் விரும்பவில்லை. என்னை திருப்திப்படுத்தக் கூடியவர் நீர் மட்டும்தான். அனுதினமும் என்னுடைய உண்மையான களிப்பையும், திருப்தியையும் உம்மிடம் மட்டுமே கண்டு கொள்ள எனக்கு போதித்தருளும்.