நல்ல மேய்ப்பன்

நல்ல மேய்ப்பன்

நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும். (யோவான் 10:14)

கடவுள் நம்மிடம் பேசுவதைக் கேட்பது, விசுவாசிகளாகிய நமக்கு அது உரிமையும், பாக்கியமும் ஆகும். வஞ்சகக் குரல்களை ஆராய்ந்து, அவருடைய சத்தத்தை அறிய கடவுள் நமக்கு பகுத்தறிவைத் தருகிறார். இன்றைய வசனத்தில் நாம் வாசிக்கிற படி, மேய்ப்பனின் குரலை அடையாளம் காணும் செம்மறி ஆடுகளின் உள்ளார்ந்த இயல்புடன் இந்த பகுத்தறிவை அவர் இணையாகக் கூறுகிறார்.

நாம் உண்மையிலேயே கடவுளுக்குச் சொந்தமானவர்களாக இருந்தால், நம்மை வழிதவறச் செய்யும் சத்தத்திலிருந்து அவருடைய குரலை நாம் அறிந்து கொள்ள முடியும். ஒரு பொருளின் தன்மையை ஆராயவும், கடவுளின் தன்மையை அறியவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

“கடவுள் என்னிடம் இதைச் செய்யச் சொன்னார்” என்று மக்கள் சொல்வதைக் கேட்கும்போது நான் வருத்தப்படுகிறேன். ஆனால் ஒரு நல்ல மேய்ப்பன் அவர்கள் செய்வதை ஒருபோதும் செய்யச் சொல்ல மாட்டார் என்பது வெளிப்படையானது. நான் ஒரு பெண்ணை அறிவேன், அவளும் அவளைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறவரும், திருமணத்திற்காக கடவுளால் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டவர்கள் என்று ஒரு ஆவிக்குறிய தலைவர் கூறியிருந்தார். ஆனால் பிரச்சினை என்னவெனில் அவருக்கு ஏற்கனவே திருமணமாயிருந்தது. கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவள் அவனை நம்பினாள், அவனுடைய மனைவியை விவாகரத்து செய்ய தூண்டினாள், அதனால் அவர்கள் ஒன்றாக இருக்கலாம் என்று எண்ணினாள். இது தேவபக்தியற்றது, முட்டாள்தனமானது, கடவுளுடைய சித்தமாக இருந்திருக்க முடியாது, ஏனெனில் அது அவருடைய வார்த்தைக்கு எதிரானது.

மக்கள் இதைப் பற்றி அடிக்கடி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், “நான் கடவுளிடமிருந்து கேட்கிறேன் என்பதை நான் எப்படி உறுதியாகக் கூறுவது?” அவருடைய குணம் மற்றும் பிறரை அவர் எப்படி வழிநடத்தினார் என்பதை உண்மையாக அறிந்து கொண்டால், அவருடைய சத்தத்திற்கும், வஞ்சகக் குரலுக்கும் உள்ள வித்தியாசம் நமக்குத் தெரியும். இயேசு தம் ஆடுகளைப் பற்றி இவ்வாறு கூறினார், “அவர்கள் ஒருபோதும் அந்நியரைப் பின்தொடர மாட்டார்கள், ஆனால் அந்நியர்களின் சத்தத்தை அறியாததால் அல்லது அவர்களின் அழைப்பை அறியாததால் அவரை விட்டு ஓடிவிடுவார்கள்” (யோவான் 10:5).


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உணர்ச்சிகள் உங்களை ஆள விடாதீர்கள், குறிப்பாக அவை உங்களை வழிநடத்தும் கடவுளின் வார்த்தை அல்லது குணத்திற்கு எதிரானதாக இருந்தால்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon