நாம் என்ன செய்வோம்?

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். – கலாத்தியர் 6:9

நாம் வாழும் இந்த உலகத்தில் நமக்கு எல்லா விதமான பிரச்சனைகளும், விரக்திகளும், கஷ்டங்களும் இருக்கும். அதுதான் வாழ்க்கை. எனவே இதை அறிந்தவர்களாக நாம் என்ன செய்வோம்?

நாம் உறுதியாக நிற்க வேண்டும், விடாமுயற்சியுடன் இருக்கவேண்டும். வேறு வார்த்தைகளில், ஒருபோதும் விட்டுவிடக் கூடாது என்பது தான் பதில்! நம் வாழ்க்கையிலே என்ன நடந்து கொண்டு இருப்பினும், விட்டுவிட மறுப்பதில் வெற்றி இருக்கின்றது.

நம் போராட்டங்களின் உச்சநிலையில் தான், பரிசுத்த ஆவியானவர் தமது மிகப்பெரிய கிரியையை நமக்குள்ளே செய்துகொண்டிருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் சூழ்நிலைகளால் அசைக்கப்பட மாட்டார். நீங்களும் நானும் அவரை உண்மையாகவே நம்புவோம் என்றால் நாமும் அசைக்க படக் கூடாது. நம் வாழ்வின் நல்ல நேரங்களில் மட்டுமே அவர் நம்முடன் இல்லை, கடினமான சமயங்களிலும் கூட நம்முடன் தான் இருக்கிறார்.

நாம் அவருடன் இருந்து அவரை பின்பற்றுவோம் என்றால் எந்த நிலையிலும் அவர் நம்மை நடத்துவார். அப்படி என்றால், ஜெபத்திலே ஜாக்கிரதையாயும், நம் தீர்மானத்தில் உறுதியாயும், விசுவாசத்திலே அசையாமலும், தேவனுடைய வார்த்தையிலே நமக்கான அவருடைய வாக்குத்தத்திலே உறுதியாய் இருக்க தீர்மானத்துடன் இருக்கவேண்டும்.

அநேக சமயங்களில், காரியங்கள் மெதுவாக நடைபெறுவதைக் கண்டு நாம் ஒதுங்கிக் கொள்கிறோம். உண்மையிலேயே பிசாசானவன் அதை சுட்டிக்காட்ட விரும்புகிறான். ஆனால் அச்சமயத்தில் தானே தேவன் தம்முடைய மிகப் பெரிய கிரியையை செய்து கொண்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதெல்லாம் உங்களைப் பற்றியதோ, என்னைப் பற்றியதோ இல்லை. தேவன் நம்மில் கிரியை செய்வது, அவர் நம் மூலமாக செய்ய விரும்பும் கிரியைக்கான ஆயத்தமே.

சில சமயங்களில் வாழ்க்கை கடினமாக இருக்கும் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் நாம் உறுதியாய் இருப்போம் என்றால் தேவன் நமக்கு உதவி செய்வார் என்பதையும் அறிந்து இருக்கிறேன். நாம் கலாத்தியர் 6:9 லே உறுதியாய் நிற்போம். நன்மையானதை செய்வதில் சோர்ந்து போகாது இருப்போமாக. நாம் விட்டுவிடாமல் இருப்போம் என்றால் சரியான நேரத்தில் ஆசீர்வாதத்தின் அறுவடையை அறுப்போம்.

எனவே இந்த கேள்வியை நான் கேட்கட்டும். நாம் என்ன செய்வோம்? என்னுடைய பதில் ஒருபோதும் விட்டு விடாதீர் என்பதே! உங்கள் பதில் என்?


ஜெபம்

கஷ்டமான சமயங்களிலும் கூட நீர் என் வாழ்க்கையிலே கிரியை செய்து கொண்டிருக்கிறீர் என்று நம்புகிறேன். இன்று நான் உறுதியாய் நிற்க தெரிந்து கொள்கிறேன். உமக்கு கீழ்ப்படிந்து விட்டுவிடாது இருக்க தெரிந்து கொள்கிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon