தேவனின் வெற்றியின் தரிசனத்தை உங்கள் வாழ்க்கைக்கென்று பெற்றுக் கொள்ளுங்கள்!

தேவனின் வெற்றியின் தரிசனத்தை உங்கள் வாழ்க்கைக்கென்று பெற்றுக் கொள்ளுங்கள்!

“இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்.” – உபாகமம் 28:13

என் வாழ்விலே எனக்கு சில பெரிய வெற்றிகள் உண்டு. தேவன் என்னை பல பழைய பாவங்கள், அடிமைத்தனங்கள், பழக்கவழக்கங்கள் இருந்து விடுதலை ஆக்கியிருக்கிறார். நான் அனுபவித்த விடுதலையின் கிளர்ச்சி முற்றிலும் ஆச்சரியப்படத்தக்கது. தேவன் நாம் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவதும் அதுதான்.

நான் ஜெயிக்க வேண்டிய போராட்டங்கள், மேற்கொள்ளவேண்டிய தடங்கல்கள் இன்னமும் உள்ளதுதான். உங்களுக்கும் உள்ளது என்று நினைக்கிறேன். செயல்படுத்த விரும்பும் ஒரு காரியத்தை என்று தெரிந்து கொண்டு அதை செயல்படுத்த உற்சாகப் படுத்துகிறேன்.

அடுத்து, கிறிஸ்துவின் மூலமாக இன்று நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வெற்றியிலே நீங்கள் வாழ்வதை பார்க்க தொடங்குங்கள். நீங்கள் விடுதலையோடு இருக்கும்போது உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

நான் உபாகமம் 28:13 ஐ ஒரு ஊக்குவிக்கும் அதிகாரமாக பார்க்கிறேன். அந்த முழு அதிகாரத்தையும் நீங்கள் வாசிக்க உங்களை உற்சாகப் படுத்துகிறேன். அதில், நீங்கள் தேவனுக்கு கீழ்படிந்தால், அவர் உங்களை ஆசீர்வதிப்பார், நீங்கள் தேவனுக்கு கீழ்படியவில்லை என்றால் சபிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப் பட்டிருக்கிறது. அது ஒரு வல்லமையுள்ள ஊக்கம் தானே?

நான் தேவனோடு இணைந்து இயங்கி காரியங்களை மேற்கொள்ளவும், சத்துரு எண்னை ஆள்வதை அனுமதிக்காமல் இருக்கவும் விரும்புகிறேன். உண்மையிலேயே ‘தேவனே, நான் மாற விரும்புகிறேன். உம்மை பிரியப்படுத்த விரும்புகிறேன்’ என்று சொல்வதே வாழ்வின் இனிமையான பயணம் என்று எண்ணுகிறேன்.

அத்தகைய மனநிலைமைக்கு நீங்கள் வரும்போது, ஒரு காரியத்திலிருந்து நீங்கள் விடுபட்டு மற்றொரு காரியம், வேறொரு காரியம் என்று செல்வீர்கள். சீக்கிரமாகவே கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்கள் அதிகாரத்தில் நீங்கள் நடக்கிறீர்கள் என்பதை உணரத் தொடங்குவீர்கள்.
வளர்கின்ற, மாற்றமடைகின்ற அனுபவம் இல்லாமல் வாழாதீர். இல்லையேல் தேவன் உங்கள் மூலமாக செய்யக்கூடிய நல்ல காரியங்களை இழந்து விடுவீர்கள்.

நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை, சிறிது நேரம் எடுத்து கற்பனை செய்து பார்த்து தேவனுடைய விடுதலையை தொடர தொடங்குங்கள். ஏனென்றால் தேவனும் நீங்களும் இணைந்து நாளொன்றுக்கு எதை வேண்டுமென்றாலும் செய்யலாம்!


ஜெபம்

தேவனே, உம்முடைய சுதந்திரத்தை இன்று என்னால் அனுபவிக்க இயலும் என்று நம்புகிறேன். இன்று நான் என்னை உமக்குள்ளாக எவ்வளவு சுதந்திரமாக இருக்க இயலுமோ அப்படியாக பார்க்கின்றேன். உமக்கு பிரியமாக வாழவும், நீர் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தில் நடக்கவும் பெலப்படுத்தியருளும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon